இன்றைய வலி; நாளைய வெற்றி: ஃபிட்னஸ் புகைப்படங்களை வெளியிட்ட சூரி
பரோட்டா சூரி என்றே நாம் அழைத்து பழக்கப்பட்டுவிட்டதாலோ என்னவோ இந்த ஃபோட்டோ நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.
பரோட்டா சூரி என்றே நாம் அழைத்து பழக்கப்பட்டுவிட்டதாலோ என்னவோ இந்த ஃபோட்டோ நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.
காமெடி நடிகர்கள் என்றால் குள்ளமாக, ஒல்லியாக, குண்டாக, தெத்துப் பல்லோடு, இல்லை பார்வையில் ஏதோ குறைபாடோடு தான் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்புகளை எல்லாம் சினிமாக்கள் உடைத்து வருவது வரவேற்கத்தக்கது. அதை உடைத்ததில் சந்தானத்திற்கு பெரும் பங்குண்டு. இப்போது சூரி அதை நிரூபித்து வருகிறார்.
ஏற்கெனவே சிவ கார்த்திகேயனோடு அவர் நடித்த சீமராஜா படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தவர் தான் நம் சூரி. இப்போது மீண்டும் தனது ஃபிட்னஸ் ஃபோட்டோவை வெளியிட்டு தன்னை பரோட்டோ சூரிக்கும் மேலாக பார்க்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்.
அவருடைய ஃபிட்னஸ் ஃபோட்டோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1997ம் ஆண்டில் இருந்து சினிமாவில் ஜீனியர் நடிகராக நடித்து வந்தாலும், சூரிக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்னவோ, வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தான். பரோட்டா காமெடி மூலம் புகழ்பெற்ற சூரிக்கு பரோட்டாவே அடைமொழியாக மாறியது.
View this post on Instagram
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பெரும் உதாரணம் பரோட்டா சூரி. மற்றும் வெற்றி கண்ட பிறகு தலைகணம் இன்றி அனைவர்க்கும் உதவும் குணமும் படைத்தவர் நடிகர் சூரி. ஒரு சாதாரண கிராமத்து இளைஞனாக இருந்து, இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வளர்ந்து நிற்கிறார் சூரி.
கடந்த ஆண்டு சூரி ஒரு ஃபோட்டோஷூட் நடத்தி அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தார். அந்த ஃபோட்டோஷூட்டில் அவர் ஒரு மாடல் போல் தோற்றமளித்திருப்பார். அவரது சால்ட் அண்ட் பெப்பர் தாடி மற்றும் சூப்பர் ஃபிட் உடற்கட்டு அந்த போட்டோஷூட்டிற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கும். அப்படித்தான் இப்போதைய ஃபிட்னஸ் ஃபோட்டோவும் கவனம் பெற்றுள்ளது.