Paridhabangal Gopi Daughter: குட்டி ரக்கட் கேர்ள் பிறந்தாச்சு.. ட்வீட் செய்த ’பரிதாபங்கள்’ கோபி.. குவியும் வாழ்த்துக்கள்..
சுதாகருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது நீண்ட நாள் காதலியுடன் திருமணம் நடந்த நிலையில், கோபிக்கும் தொடர்ந்து செப்டெம்பரில் திருமணம் நடைபெற்றது இவர்களது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
![Paridhabangal Gopi Daughter: குட்டி ரக்கட் கேர்ள் பிறந்தாச்சு.. ட்வீட் செய்த ’பரிதாபங்கள்’ கோபி.. குவியும் வாழ்த்துக்கள்.. paridhabangal Gopi Aravindh blessed with baby girl shared in his status details Paridhabangal Gopi Daughter: குட்டி ரக்கட் கேர்ள் பிறந்தாச்சு.. ட்வீட் செய்த ’பரிதாபங்கள்’ கோபி.. குவியும் வாழ்த்துக்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/d6f648e49948d31e75eaa55b3670e44f1686811540496574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பரிதாபங்கள் கோபிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்பு தொடங்கி நண்பர்கள் வரை தங்களை சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகள் அத்தனையையும் நையாண்டி செய்து தமிழின் பிரபல இரட்டையர்களாக மக்களை சிரிக்க வைத்து வருபவர்கள் கோபி - சுதாகர்.
திருச்சியைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் பரிதாபங்கள் சேனல் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.
இவர்களில் கோபிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிச்சயம் நடைபெற்றது. யமுனா என்னும் நியூட்ரிஷியனை கோபியின் வீட்டார் பார்த்து நிச்சயம் செய்த நிலையில், தொடர்ந்து கடந்த செப்டெம்பர் மாதம் கோபி அரேஞ்ச்ட் மேரேஜ் செய்து கொண்டார்.
முன்னதாக சுதாகருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது நீண்ட நாள் காதலியுடன் திருமணம் நடந்த நிலையில், கோபிக்கும் தொடர்ந்து செப்டெம்பரில் திருமணம் நடைபெற்றது இவர்களது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கோபி மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். தன் இன்ஸ்டா பக்கத்தில் “தகப்பனானேன்... அழகிய மகள் பிறந்துள்ளாள்” என ஸ்டேட்டஸில் கோபி பகிர்ந்துள்ளார்.
முன்னதாக தன் தல தீபாவளியின்போது தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கோபி, தான் திருமணத்துக்கு பின்னர் காதலிக்கத் தொடங்கி இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் கோபிக்கும் அவரது மனைவி யமுனாவுக்கும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக மீம் க்ரியேட்டர்களின் டார்லிங்ஸாகவும் இணையத்தைக் கலக்கி வலம் வரும் கோபி - சுதாகர், தங்கள் கரியரின் தொடக்க காலத்தில் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிஜெக்ட் செய்யப்பட்டனர். ஆனால் இதற்கெல்லாம் சளைக்காமல் தங்கள் பயணத்தை யூடியூபில் தொடங்கி அதில் பெரும் வெற்றியும் கண்டனர்.
கல்லூரிக்காலம் முதலே சிறந்த நண்பர்களாக வலம் வந்து கோபி - சுதாகர் இருவரும் தற்போது தங்கள் பட பணிகளில் பிஸியாக உள்ளனர். இந்தப் படத்தை இவர்களே தயாரித்து, அதில் நடிக்கவும் உள்ளனர்.
முழு நீள காமெடி படமாக மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் செண்டிமெண்ட் கலந்தும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும்போது சினிமா கனவுகளுடன் வந்த கோபி - சுதாகர் இருவரும் தங்கள் வெள்ளித்திரைப் பயணத்தைத் தொடங்கியிருப்பது இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க: 11 Years of Murattu Kaalai: சொதப்பிய ரீமேக்.. ஆத்திரப்பட்ட ரஜினி ரசிகர்கள்.. 11 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர்.சி நடித்த ‘முரட்டுக்காளை’
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)