மேலும் அறிய

நயன்தாரா மகன்களை கிண்டல் செய்து காட்சி...சர்ச்சையை கிளப்பியிருக்கும் பாண்டிராஜின் பரிமளா & கோ படம்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பரிமளா & கோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி பரிமளா & கோ திரைப்படம் வெளியானது. ஜெயராம் , உர்வசி , மிஷ்கின் , சாண்டி , அனந்திகா , சஞ்சனா , யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பரிமளா & கோ திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் குழந்தைகளான உயிர் உலகு ஆகிய இருவரையும் கேலி செய்யும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது நெட்டிசன்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தில் மீண்டும் வடசென்னையை சேர்ந்தவர்களை ரவுடிகளாகவும் கஞ்சா விற்பவர்களாகும் இயக்குநர் சித்தரித்துள்ளது பரவலாக கண்டங்களை பெற்று வருகிறது 

கணவன் மனைவியான ஜெயராம் ஊர்வசி தங்கள் இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். வடசென்னையைச் சேர்ந்தவரான சாண்டி ஜெயராமின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்து வருகிறார். அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என ஜெயராம் குடும்பத்தினர் தவித்து வரும் நிலையில் திடீரென்று சாண்டி கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்று விசாரிக்க வரும் போலீஸாக வருகிறார் மிஷ்கின் . சாண்டியை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பதே பரிமளா படத்தின் கதை. 

த்ரில், காமெடி கலந்து உருவாகியுள்ள பரிமளா & கோ ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. வழக்கமாக பாண்டிராஜ் படங்களின் ரசிகரகளே இப்படம் அவரது சுமாரான படங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்கள். இது தவிர்த்து இப்படத்தில் படத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகளை நெட்டிசன்கள் சுட்டி காட்டியுள்ளார்கள். 

நயன்தாரா மகன்களை கேலி செய்து காட்சி

பரிமளா & கோ திரைப்படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கு உயிர் உலகு என பெயர் வைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இந்த பெயரை கேலி செய்யும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள். நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வது வழக்கம் தான். ஆனால் ஒரு இயக்குநர் தனது படத்தில் எதற்காக இப்படி செய்ய வேண்டும். தலைவன் தலைவி படத்தில் நயன்தாராவை விமர்சித்த பாண்டிராஜ் இந்த படத்தில் ஒரு படி மேலே போய் அவரது குழந்தைகளை கேலி செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

இது மட்டுமில்லாமல் படத்தில் வில்லனாக நடித்துள்ள சாண்டி மாஸ்டர் நடித்துள்ள கதாபாத்திரம் வடசென்னையை சேர்ந்தவராக காட்டப்படுகிறார். அவரது அம்மாவும் தள்ளு வண்டியில் சாப்பாடு கடை வைத்துக்கொண்டு கஞ்சா விற்பவராக காட்டப்படுகிறார். இன்னும் எத்தனை நாளுக்கு தான் வடசென்னையைச் சேர்ந்தவர்களையே குற்றவாளியாக காட்டப்போகிறீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget