மேலும் அறிய

யார கேட்டு இத பண்ணீங்க...பிரபல ஊடக நிறுவனத்தை விலாசிய அஜித் அண்ணன்

அனுமதியின்றி தான் பதிவிட்ட வீடியோவை பயன்படுத்திய பிரபல செய்தி ஊடகத்தை கண்டித்து நடிகர் அஜித் குமாரின் அண்ணன் அனில் குமார் பதிவிட்டுள்ளார்

தனது தாயார் இறப்பைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அனில் குமார் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பிரபல செய்தி ஊடகம் தங்களது தளத்தில் வெளியிட்டிருந்தது. அனுமதியின்றி தனது வீடியோவை பயன்படுத்தியதற்காக அந்த செய்தி நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து அனில் குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் அஜித் குமாரின் தாயாரான மோகினி மணி கடந்த மே 30 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக காலமானார். துபாயில் இருந்த நடிகர் அஜித் தனது தாயாரைப் பார்க்க துபாயில் இருந்து விமானத்தில் வந்து சேர்ந்தார். தமிழக முதல்வர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் அஜித் வீட்டிற்கு சென்று தனது இரங்கலை தெரிவித்தார். பல்வேறு ரசிகரக்ள் மற்றும் திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்திருந்தனர். 

நன்றி தெரிவித்து அனில் குமார் வீடியோ

தங்களது தாயார் இறப்பின் போது தனக்கும் தனது குடும்பத்திற்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அஜித்தின் அண்ணன் அனில் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். " என் தாயார் இறந்து 60 மணி நேரம் கடந்துள்ளது. இந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் கூறியும் இரங்கல் தெரிவித்தும்  எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 300 நபர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தீர்கள். வெறும் ஒரு எமோஜி அனுப்பி நாங்கள் உங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. உங்கள் அனைவரிடமும் தனித்தனியாக நான் என்னுடைய நன்றியைத் தெரிவிப்பேன். மீண்டும் என்னுடைய வேலைகளுக்கு திரும்பி என் அம்மாவின் பெயருக்கு பெருமை சேர்ப்பேன். " என அனில் குமார் இந்த வீடியோவில் பேசியிருந்தார்

அனுமதியின்றி வீடியோவை பயன்படுத்தியதால் சர்ச்சை

அனில் குமாரின் இந்த வீடியோவை பிரபல செய்தி நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பயன்படுத்தியிருந்தது. இதனால் கடுப்பான அனில் அந்த செய்தி நிறுவனத்தை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " என்னுடைய வீடியோவில் உங்கள் நிறுவனத்தின் லோகோவைப் பார்க்க எரிச்சலாக இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு முன்னாள் நீங்கள் என்னிடம் அனுமதி பெற்றீர்களா ? உங்களுடைய ஊடகவியல் வகுப்புகளின் போது காப்புரிமை மீறல் மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு குறித்த வகுப்புகளில் தூங்கிவிட்டீர்களா ? ஊடகங்களை மக்கள் தேவையில்லாமல் விமர்சிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். " என அனில் இந்த பதிவில் பதிவிட்டுள்ளார். 

அனிலின் விமர்சனத்தைத் தொடர்ந்து இந்த வீடியோவை அந்த செய்தி நிறுவனம் தங்களது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
வடக்கில் எகிறப்போகும் வசூல்...ஜெயிலர் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ
வடக்கில் எகிறப்போகும் வசூல்...ஜெயிலர் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ
CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிகுமார், ஷங்கர் வரிசையில் நெல்சன்... ரஜினிக்கு ஹிட் கொடுத்த இயக்குநர்கள்!
சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிகுமார், ஷங்கர் வரிசையில் நெல்சன்... ரஜினிக்கு ஹிட் கொடுத்த இயக்குநர்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget