மேலும் அறிய

HBD Allu Arjun : இது புஷ்பா ரூலு... மிஸ்டர் பர்ஃபெக்ட் அல்லு அர்ஜுன் கொண்டாடும் ஸ்பெஷல் பிறந்தநாள்! 

பான் இந்திய நடிகர் எந்த அந்தஸ்தை பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களுக்கு விருந்தாக புஷ்பா 2 படத்தின் கான்செப்ட் 2 டீசர் வெளியிட்டுள்ளது படக்குழு.

தென்னிந்தியாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் அல்லு அர்ஜுன் இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய சொந்தமான திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் வாரிசு என்பதால் அல்லு அர்ஜுன் சினிமா துறையில் நுழைவது எளிதாக அமைந்துவிட்டது. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு ஹீரோவாக அறிமுகம் கொடுத்தது 2002ம் ஆண்டு வெளியான 'கங்கோத்ரி' திரைப்படம். 

 

HBD Allu Arjun : இது புஷ்பா ரூலு... மிஸ்டர் பர்ஃபெக்ட் அல்லு அர்ஜுன் கொண்டாடும் ஸ்பெஷல் பிறந்தநாள்! 

சென்னை பையன் :

சென்னையில் பிறந்து வளர்ந்த பக்கா சென்னை பையன்தான் அல்லு அர்ஜுன். 20 வயதிற்கு பிறகு தான் ஐதராபாத்தில் செட்டிலானார். முதல் படத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இரண்டாவதாக அவர் நடித்த ஆர்யா திரைப்படத்தில் தனது ஒரிஜினாலிட்டி வெளிப்பட்டதால் கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போய் ரசிகர்களை தனது துறுதுறுப்பால் கவர்ந்துவிட்டார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 18. அதனை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. இப்படத்தில் தொடங்கிய இயக்குநர் சுகுமார்  - அல்லு அர்ஜுன் வெற்றி கூட்டணி ஆர்யாவில் தொடங்கி புஷ்பா : தி ரைஸ் வரை இன்றும் நீடிக்கிறது.  

அசால்டானா  டான்சர் :

அல்லு அர்ஜுன் ஒரு சிறந்த டான்சர். மிகவும் கடினமான டான்ஸ் ஸ்டேப்ஸ்களை கூட அசால்ட்டாக ஆடக்கூடியவர். அதற்கு சான்றாக அமைந்த புட்டபொம்மா புட்டபொம்மா, ரிங்கா ரிங்கா பாடல் அவரை பட்டி தொட்டி எல்லாம் சென்றடைந்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அடையாளம் காட்டியது. டான்ஸ் மீது எந்த அளவிற்கு ஆர்வம் உள்ளதோ அதே அளவிற்கு ஜிம்னாஸ்டிக்ஸ் மீதும் ஈடுபாடு அதிகம் கொண்டவர். அதனாலேயே அவரது உடலை ரப்பர் போல வைத்து வளைத்து ஆட கூடியவர். அல்லு அர்ஜுன் டான்ஸ் மீது மட்டுமன்றி கார்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் முதல் கஸ்டமைஸ்ட் வேனிட்டி வேன் வரை ஏராளமான கார்களை வைத்துள்ளார்.  

HBD Allu Arjun : இது புஷ்பா ரூலு... மிஸ்டர் பர்ஃபெக்ட் அல்லு அர்ஜுன் கொண்டாடும் ஸ்பெஷல் பிறந்தநாள்! 

ரசிகர்கள் மீது அளவுகடந்த பிரியம் :

தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் மீது அளவு கடந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். அல்லுவிற்கு ஏராளமான மலையாள ரசிகர்கள் உள்ளனர் என்பதால் அவரின் பல படங்கள் மலையாளத்தில் டப்பிங் செய்யப்படுகின்றன. ஸ்டைலிஷ் பாடி லாங்குவேஜ்,  துறுதுறுப்பான நடிப்பு, அசரவைக்கும் டான்ஸ் இவை தான் அல்லுவின் ஐகானிக் அடையாளங்கள். 

புஷ்பா படக்குழுவின் பர்த்டே சர்ப்ரைஸ்:

சுகுமாரின் 'புஷ்பா' திரைப்படம் மூலம் பான் இந்திய நடிகராக முன்னேறி சர்வதேச அளவில் பிரபலமான அல்லு அர்ஜுன் தற்போது அதன் இரண்டாம் பாகமான புஷ்பா : தி ரூல் படத்தில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் கான்செப்ட் டீசர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 3 நிமிடங்கள் கொண்ட டீசரில் 15 வினாடிகளுக்கு குறைவாக தான் அல்லு அர்ஜுன் வந்து போகிறார். ஆனால் அந்த குறுகிய நொடிகளிலேயே மாசான என்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆக்ரமித்துவிட்டார். இந்த பிறந்தநாள் அல்லுவுக்கு ஒரு மிக ஸ்பெஷலான பிறந்தநாள் !!!
   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget