மேலும் அறிய
Advertisement
Thangalaan First Single : மினிக்கி மினிக்கி மேனா மினிக்கி... வெளியானது 'தங்கலான்' ஃபர்ஸ்ட் சிங்கிள்
Thangalaan First Single : பா. ரஞ்சித் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'மினிக்கி மினிக்கி' பாடலின் லிரிக்கல் வீடியோ.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக விளங்குபவர் கலாய்க்க பா. ரஞ்சித். அவரின் அடுத்தடுத்த பாடங்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் என்றுமே இருக்கும். அந்த வகையில் கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்கள் நிலத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. விக்ரம் , பார்வதி திருவொத்து , பசுபதி , மாளவிகா மோகனன் , டேனியல் காலடா கிரோன் , முத்துக்குமார் , ஹரி கிருஷ்ணன், வேட்டை முத்துக்குமார் , அர்ஜூன் , சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத் , மதுரை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு சில தினங்களுக்கு முன்னர் தான் 'தங்கலான்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
Golden celebration of the people of #Thangalaan begins ☀❤
— pa.ranjith (@beemji) July 17, 2024
Watch #MinikkiMinikki lyric video
▶️ https://t.co/l6QsdKGlZb
A @gvprakash musical 🎵@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @NehaGnanavel @dhananjayang… pic.twitter.com/cePGdKBHoU
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மினிக்கி...' பாடலின் ப்ரோமோ வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. ப்ரோமோ வீடியோவை தொடர்ந்து தற்போது சிந்தூரி விஷால் குரலில் ஒலிக்கும் அப்பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion