ஆஸ்கர் 2023 போட்டியில் தேர்வாகியுள்ள குஜராத்தி திரைப்படம் செல்லோ ஷோ
ஆஸ்கர் 2023 போட்டியில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிடுவதற்கான தேர்வுப் பட்டியலில் செல்லோ ஷோ என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது.
ஆஸ்கர் 2023 போட்டியில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிடுவதற்கான தேர்வுப் பட்டியலில் செல்லோ ஷோ என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்தப் படம் தேர்வானதை இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் நாகபர்ணா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
முன்னதாக அனுபம் கேர் நடித்த காஷ்மீர் ஃப்ளைஸ் அல்லது ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் தான் ஆஸ்கர் 2023 தேர்வுப் பட்டியலில் இந்தியத் தரப்பில் இடம்பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக செல்லோ ஷோ 'Chello Show' என்ற திரைப்படம் பட்டியலில் இடம்பெற தேர்வாகியுள்ளது.
ஆங்கிலத்தில் 'Chello Show' என்றால் கடைசி திரைக் காட்சி என்று அர்த்தமாம். இந்த படத்தை பான் நாலின் என்பவர் இயக்கியுள்ளார். இது நாடு முழுவதும் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தை சித்தார்த் ராய் கபூர் ஃபில்ம்ஸ் தயாரித்துள்ளது. ஜுகத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் ஃப்லிம்ஸ், செல்லோ ஷோ எல்எல்பி மற்றும் மார் டுலே நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதில் பாவின் ராபரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, தீபன் ராவல், பரேஷ் மேத்தா ஆகியோர் நடித்துள்ளனர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ட்ரிபேக்கா திரைத் திருவிழாவில் சர்வதேச திரைப்படப் பிரிவில் முதன்முதலில் திரையிடப்பட்டது.
இத்திரைப்படம் இயக்குநர் நாலின் அவரது பால்ய பருவத்தில் திரைப்படங்கள் மீது கொண்ட காதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
செல்லோ ஷோ படத்தின் ட்ரைலரைக் காண:
அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Awards) (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.