Oscar Awards 2023: ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய கலைஞர்கள்.. கரவொலி எழுப்பிய பிரபலங்கள்..!
திரையுலகில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது.
95வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நடனக்கலைஞர்கள் நடனம் ஆடினர். இதனை விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் கைதட்டி, கரவொலி எழுப்பி ரசித்தனர்.
திரையுலகில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தெலுங்கில் ராஜமௌலி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முன்னதாக விழா நடைபெறும் இடத்திற்கு நடிகர் ராம்சரண், ஆர்.ஆர்.ஆர். இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் தங்கள் மனைவியுடன் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நேரடியாக கால பைரவா, ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோர் இப்பாடலை பாட, படத்தில் இடம்பெற்ற அதேநடனம் மேடையிலும் நிகழ்த்தப்பட்டது. இதற்கிடையில் நாட்டு நாட்டு பாடல் மேடையில் அரங்கேற்றப்படுவதை நடிகை தீபிகா படுகோனே அறிவித்தார். இந்த பாடல் நடனம் முடிந்ததும் பங்கேற்ற பிரபலங்கள் அனைவரும் கைதட்டி, கரவொலி எழுப்பி ரசித்தனர்.