Oscar Awards 2023: ஆஸ்கர் விருதுகளை குவிக்கும் Everything Everywhere All at Once படம் ... ரசிகர்கள் மகிழ்ச்சி
Oscar Awards 2023: 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் Everything Everywhere All at Once படம் அடுத்தடுத்து விருதுகளை பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் Everything Everywhere All at Once படம் அடுத்தடுத்து விருதுகளை பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் அறிவிக்கப்பட்ட சிறந்த துணை நடிகருக்கான விருதை Everything Everywhere All at Once படத்திற்காக கீ க்யூ குவான் வென்றார். இதனைத் தொடர்ந்து சிறந்த துணை நடிகைக்கான விருதும் இதே படத்தில் நடித்த நடிகை ஜேமி லீ கர்டிஸூக்கு வழங்கப்பட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை ஆகிய பிரிவுகளில் கிடைத்த விருதை இயக்குநர்கள் டேனியல் குவான் , டேனியல் ஷீனெர்ட் பெற்றுக் கொண்டனர். மேலும் சிறந்த எடிட்டிங் விருதை பால் ரோஜர்ஸூம், சிறந்த நடிகைக்கான விருதை மைக்கேல் யோவும் பெற்றுக்கொண்டனர். 10 பிரிவுகளில் கலந்து கொண்ட Everything Everywhere All at Once படம் 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படத்தை டேனியல் குவான் , டேனியல் ஷீனெர்ட் ஆகிய 2 இயக்குநர்கள் இயக்கினர். பாக்ஸ் ஆபீஸில் 10.74 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளிய இப்படம் ஆஸ்கர் விருது வழங்கும் 10 பிரிவுகளின் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.