Oppenheimer: 24 மணிநேரமும் ஓப்பன்ஹைமர் படத்தைப் பார்க்கலாம்..1 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.. பி.வி.ஆர் அதிரடி
ஓப்பன்ஹைமர் படத்தை ரசிகர்கள் ஒரு நாளில் எந்த நேரத்திலும் பார்க்கும்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.வி.ஆர்.சினிமாஸ்
ஓப்பன்ஹைமர் படம் அடுத்த வாரம் 21-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தியாவின் பிரபல மல்டிப்ளெக்ஸ் திரையரங்க நிறுவனமான பி.வி.ஆர் சினிமாஸ் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
24 மணிநேர திரையிடல்
ஐ மேக்ஸ் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ஓப்பன்ஹைமர் திரைப்படத்தை 24 மணி நேரமும் திரையிடப் போவதாக அறிவித்துள்ளாது பி.வி.ஆர் நிறுவனம். ரசிகர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த சேவை தொடங்குப்பட்டுள்ளது.
நிரம்பி வழியப்போகும் ஐமேக்ஸ் காட்சிகள்
கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல் இந்தப் படத்திற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை முதல் நாளில் மட்டும் மொத்தம் 1,000,00 டிக்கெட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்தியாவின் இரண்டு முக்கிய திரையரங்க நிறுவனங்களான ஐ மேக்ஸ் மற்றும் பி.வி.ஆர் இரண்டு மட்டும் இதுவரை முதல் வாரத்திற்கு 22,500 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன.
Get ready for a back-to-back Oppenheimer movie screening! 🎥 Watch the inspiring tale anytime around-the-clock, as #Oppenheimer will be screening at #PVR for 24 hours🕰️
— P V R C i n e m a s (@_PVRCinemas) July 14, 2023
Releasing at PVR on 21st July ’23.
Book your tickets here: https://t.co/WyiWtS0CBM
.
.
.#OppenheimerMovie… pic.twitter.com/gGYo9xIQct
ஓப்பன்ஹைமர்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரான கிறிஸ்டோஃப்ர் நோலன் தற்போது அணு ஆயுதத்தைக் முதல் முதலில் கண்டுபிடித்தவரான ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஓப்பன்ஹெய்மராக சிலியன் மர்ஃபி நடித்து வருகிறார். கடந்த இருபது ஆண்டுகளாக நோலனின் படங்களில் நடித்துவரும் சிலியன் மர்ஃபி முதல் முறையாக பிரதானக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். சின்காப்பி இன்க் மற்றும் அட்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் நோலன், அவரின் மனைவி எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள். யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது. புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.
கிராஃபிக்ஸ் காட்சிகளே இல்லாத படம்
எப்போது தனது படங்களை முடிந்த அளவிற்கு தத்ரூபமாக எடுக்க நினைப்பவர் நோலன். தற்போது ஓப்பன்ஹைமர் படத்தில் ஒரு படி மேலே சென்று மிக அசாத்தியமான ஒரு சாதனையைச் செய்துள்ளார் நோலன். கிட்டத்தட்ட 100 மில்லியன் செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஒரு கிராஃபிக்ஸ் காட்சிகள் கூட இல்லாமல் முற்றிலும் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது.
குவியும் பாராட்டுக்கள்
ஏற்கனவே படத்தின் சிறப்புத் திரையிடல்களில் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் இந்தப் படம் கிறிஸ்டோஃபர் நோலனின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.