மேலும் அறிய

Oppenheimer First Review: கிரிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹைமர் படம் ஒரு மாஸ்டர்பீஸ்.. படத்தைப் புகழ்ந்து தள்ளிய விமர்சகர்கள்..

பாரிஸில் நடைபெற்ற ஓப்பன்ஹைமர் படத்தை பார்த்த விமர்சகர்கள் படத்தைஒரு மாஸ்டர்பீஸ் என்று புகழ்ந்துள்ளார்கள்

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரான கிறிஸ்டோஃப்ர் நோலன்  தற்போது  அனு ஆயுதத்தைக் முதல் முதலில்  கண்டுபிடித்தவரான ஒப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஓப்பன்ஹெய்மராக சிலியன் மர்ஃபி நடித்து வருகிறார். கடந்த இருபது ஆண்டுகளாக நோலனின் படங்களில் நடித்துவரும் சிலியன் மர்ஃபி முதல் முறையாக பிரதானக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். சின்காப்பி இன்க் மற்றும் அட்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் நோலன், அவரின் மனைவி எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.  யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது. புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தை தழுவி இப்படம் உருவாகி வருகிறது.

கிராஃபிக்ஸ் காட்சிகளே இல்லாத படம்

 எப்போது தனது படங்களை முடிந்த அளவிற்கு தத்ரூபமாக எடுக்க நினைப்பவர் நோலன்.தற்போது ஓப்பன்ஹைமர் படத்தில் ஒரு படி மேலே சென்று மிக அசாத்தியமான ஒரு சாதனையைச் செய்துள்ளார் நோலன். கிட்டத்தட்ட 100 மில்லியன் செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஒரு கிராஃபிக்ஸ் காட்சிகள் கூட இல்லாமல் முற்றிலும் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது.

பாராட்டுக்களை பெறும் ஓப்பன்ஹைமர்

வரும் ஜூலை 21 ஆம் தேதி திரைய்ரங்குகளில் வெளியாக இருக்கும் ஓப்பன்ஹைமர் படம் எப்படி இருக்க்அபோகிறது என்கிற ஆர்வம் அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி பாரிஸில் ஓப்பன்ஹைமர் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட சர்வதேச பத்திரிகைகள்  படம் குறித்த தங்களது விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. நாம் எதிர்பார்த்த பதில்தான் அவர்களிடம் இருந்து வந்திருக்கிறது. “ஓப்பன்ஹைமர் ஒரு மிகத் தீவிரமான அதே நேரத்தில் ஒரு மாஸ்டர்பீஸ்” என்று அந்தப் படத்தைப் புகழ்ந்துள்ளார்கள் அவர்கள். இந்த தகவலை தெரிந்து கொண்ட பிறகு தங்களது பயத்தை விட்டு  ரசிகர்கள் செய்ய வேண்டியது படம் வெளியாகும் வரை காத்திருப்பது மட்டும்தான்.

கிறிஸ்டோஃபர் நோலன்

அனைத்து வகையிலும் ஒரு தரமான திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்கு, உலக திரைப்பட கலைஞர்களுக்கு ஒரு ஆகச்சிறந்த முன்னோடியாக விளங்குபவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.  நேர்த்தியான மேக்கிங் மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் அவருக்கான அடையாளமாக உருவாகியுள்ளது. முழுமையான கமர்சியல் கதாபாத்திரமான பேட் மேனை மையப்படுத்தியே அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கதைக்களத்தை உருவாக்கி பெரும் வெற்றி கண்டவர் நோலன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு வெளியான டெனட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் வருகிறார் நோலன்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget