மேலும் அறிய

Oppenheimer Box Office Collection: இந்தியாவில் அமோக வசூல்... சவால் விடும் 'பார்பி'.. ஓப்பன்ஹெய்மர் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கு ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுதத்தை கண்டுபிடித்த ராபர்ட்.ஜே.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் ஓப்பன்ஹெய்மர் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ஓப்பன்ஹெய்மர் படம் முதல் நாளில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்தது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஓப்பன்ஹெய்மர்

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கி, கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பியூ முதலியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். லுட்விக் கோரான்ஸன் இசையமைத்து ஹோய்டே வான் ஹோய்டெமா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதைச்சுருக்கம்

புலிட்சர் விருது பெற்ற ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ எனும் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஓப்பன்ஹெய்மர். இயற்பியல் விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மர், ஹிட்லரின் நாஜிப்படையை தோற்கடிக்க அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

அவரது கண்டுபிடிப்பு ஏற்படுத்தும் பேரழிவுகளைக் கண்டு கடும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி அணு ஆயுதத்துக்கு எதிராக பேசத்தொடங்குவதால் அவரை கம்யூனிஸ ஆதரவாளராகக் கருதி அவர் மீது விசாரணை நடத்துகிறது அவரது நாடான அமெரிக்கா. ஆக்கும் சக்தியாக இருந்த அறிவியல் அழிக்கும் சக்தியாக மாறிய இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தின் அரசியலை பேசும் படமாக அமைந்திருக்கிறது ஓப்பன்ஹெய்மர் படம்.

பலத்த வரவேற்பு

உலகம் முழுவதும் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவிற்கான வரவேற்பு இருந்து வந்தது. மேற்கு நாடுகளில் மட்டுமில்லாமல் இந்தியாவில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாவதற்கு முன்பாக மொத்தம் 3 லட்சம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் நேற்று வெளியான ஓப்பன்ஹெய்மர் உலக அளவில் மற்றும் இந்திய அளவில் எவ்வளவு வசூல் செய்தது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் நாள் வசூல

ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 29 மில்லியன் டாலர்களும் இந்தியாவில் 13.50 கோடியும் வசூல் செய்துள்ளது.

ஓப்பன்ஹெய்மரை பின்னுக்கு தள்ளிய பார்பி

ஓப்பன்ஹெய்மர் படம் வெளியாகிய அதே நாளில் உலகம் முழுவதும் வெளியான மற்றொரு திரைப்படம் கிரெட்டா கெர்விக் இயக்கிய பார்பி திரைப்படம். இந்த இரண்டு படங்களில் வசூலைப் பொறுத்தவரை பார்பி படமே அதிக வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளில் மட்டுமே 66 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது பார்பி.

 இந்தியாவில் கொடிகட்டி பறக்கும் ஓப்பன்ஹெய்மர்

மற்ற நாடுகளில் பார்பி படம் முன்னிலையில் இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் ஓப்பன்ஹெய்மர் படம் வசூலில் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவில் 13.50 கோடிகளை ஓப்பன்ஹெய்மர் வசூல் செய்துள்ள நிலையில், பார்பி திரைப்படம் 4.50 கோடி வசூல் செய்துள்ளது. இந்தத் தகவல் இந்தியாவில் கிறிஸ்டோஃபர் நோலனின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget