Onam 2023: 'தங்க தேரில் ஓணம் வந்தல்லோ' .. மாஸ் காட்டிய பிரபலங்கள்.. களைகட்டிய ஓணம் பண்டிகை..!
Onam Festival 2023: ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய நடிகர், நடிகைகள் பற்றி காணலாம்.
மலையாள நடிகர் மோகன்லால், துல்கர் சல்மான், பாடகி சித்ரா உள்ளிட்ட பலர் ஓணம் பண்டிகை கொண்டாடியதுடன், ரசிகர்களுக்கு தங்களுடைய வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
மகாபலி மன்னன் பாதாள உலகில் இருந்து நாட்டு மக்களை காண வரும் நிகழ்வாக ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் கேரளாவின் பாரம்பரிய ஆடை அணிந்து அனைத்து மத மக்களும் மலர் கோலங்கள் போட்டு மகாபலி மன்னனை வரவேற்கின்றனர்.
View this post on Instagram
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சாதி, பேதமின்றி ஓணம் பண்டிகையை கொண்டாடி வருவதால், அரசியல் தலைவர்கள் பலரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். திரை பிரபலங்களும் ஓணம் பண்டிகை கொண்டாடியதுடன் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் ஓணம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மலையாள திரையுலகின் ஸ்டாரான மோகன்லால் ஓணம் பண்டிகை கொண்டாடும் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
എല്ലാ മലയാളികൾക്കും എൻ്റെ ഹൃദയം നിറഞ്ഞ തിരുവോണാശംസകൾ 🌼#HappyOnam pic.twitter.com/GrY047B0Ir
— Mohanlal (@Mohanlal) August 29, 2023
பாடகி சித்ரா எல்லாரும் சந்தோஷத்துடன், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் ஓணம் பண்டிகை வாழ்த்து என்றும் கூறியுள்ளார்.
Happy Onam Everyone 🌸🌺🌻🌾#KSChithra #Onam2023 #Onam pic.twitter.com/8ZHYQGF8nl
— K S Chithra (@KSChithra) August 29, 2023
குழந்தை நட்சத்திரமாக நானும் ரவுடி தான், மிருதன், மாமனிதன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த அனிகா ஓணம் பண்டிகையை கொண்டாடி வாழ்த்து கூறியுள்ளார்.
View this post on Instagram
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய வீடியோக்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
மேலும் படிக்க: Jason Sanjay: தந்தை வழி அல்லாமல் தாத்தா வழி செல்லும் தளபதி மகன்: விஷயம் இதுதான்!