LIC Movie: LIC பட ஷூட்டிங்கில் வேலையை காட்டிய நிஃபியா பர்னிச்சர் சிறுவன்.. வைரலாகும் வீடியோ!
LIC படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் நீண்ட இடைவெளிக்குப் பின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Meet our #LIC Team's new Publicity Manager 😉
Sneak peek from the sets! 👀
.@VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty #RaviVarman #shivashahra_official
.#LoveInsuranceCorporation #rowdypictures pic.twitter.com/ODchdgKlKb— Rowdy Pictures (@Rowdy_Pictures) February 3, 2024
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித்குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டில் நடிக்கும் நிலையில், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் நீண்ட இடைவெளிக்குப் பின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இதற்காக அவர் தாடி வளர்த்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் நபராக வரும் சீமான், பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படம் LIC ( Love insurance Corporation) என பெயரிடப்பட்டுளது. இந்த பெயரை மாற்றச் சொல்லி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு பணியை செய்கிறார். உடை வடிவமைப்பை பிரவீன் ரஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கும் நிலையில் விரைவில் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIC ( Love insurance Corporation) படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் பிரபலமான நிஃப்யா ஃபர்னிச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த சிறுவன் முகமது ரசூல் பேசும் வீடியோ இடம் பெற்றுள்ளது. LIC படத்தின் பப்ளிசிட்டி மேனேஜர் என்ற அடைமொழியோடு பேசும் அச்சிறுவன் தனது நிறுவன பர்னிச்சரை விற்பது போல இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி, காமெடி நடிகர் ஷாரா ஆகியோர் விற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் முகமது ரசூல் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Tamil Cinema: முடிவுக்கு வரும் முன்னணி நடிகர்களின் சகாப்தம்?.. அடிவாங்கப்போகும் கோலிவுட் கல்லா!

