Keerthy Suresh:இந்த மேட்டர் விஜய்க்கு முன்னாடியே தெரியும்: அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் காதல் கதை திரையுலகில் சமந்தா, விஜர் இருவருக்கும் தெரிந்ததுதான் என அவர் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி இருவரும் காதலித்தது விஜய் சார் உள்பட திரைத்துறையில் சிலருக்கு தெரியும் என கீர்த்தி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார். வருன் தவான் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுடிலும் அறிமுகம் ஆகிவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் திருமணம்:
கொச்சியில் பள்ளி பருவத்தில் கீர்த்தி உடன் படித்த ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி சுரேஷ் 15 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக திருமணத்திற்கு முன்பு அறிவித்திருந்தார். பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆண்டனி துபாயை மையமாக கொண்ட பிஸினஸ் செய்து வருவதாகவும், கொச்சியில் பள்ளி படிப்பின்போது மலந்த காதல் 15 ஆண்டுகளை கடந்து திருமணம நடந்ததை ரசிகர்கள் வாழ்த்து கொண்டாடினர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் போஸ்டர் வெளியிட்டு காதல் குறித்து அறிவித்தார்.
பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்தினார். நடிகர் விஜய் மட்டுமின்றி த்ரிஷா, இயக்குனர் அட்லீ போன்ற திரை பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்தினர்.
கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. நடிகர் விஜய் மணமக்களை வாழ்த்திய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். நடிகரும். தவெக தலைவருமான விஜய் மணமக்கள் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி இருவரது தோளிலும் கை போட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
காதல் கதை:
கீர்த்தி கரேஷ் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் காதலிக்கும் விசயத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும் திரைத்துறையில் சிலருக்கு மட்டும் தெரியும் என்றார். அவர் அளித்த பேட்டியில்.” நானும் ஆண்டனியும் காதலிப்பது யாருக்கும் தெரியாது. சிலருக்கும் மட்டுமே தெரியும். திரைத் துறையிலும் சிலரிடமே பகிர்ந்திருந்தேன். Sam (சமந்தா), ஜெகதீஷ், அட்லீ, ப்ரியா, விஜய் சார், கல்யானி ப்ரியதர்ஷன், ஐஸ்வர்யா லஷ்மி ஆகிய சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.” என்று தெரிவித்திருந்தார்.
இருவரும் காதல் பற்றி ரகசியமாக வைத்திருக்க விரும்பியதாக தெரிவித்தார். ”ஆண்டனி லைம்லைட் விரும்பாதவர். திருமணம் நடக்கும்போது அறிவிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.” என தனிப்பட்ட விசயங்கள் பற்றி எளிதாக பொதுவெளியில் தெரிவிக்க மாட்டோம் என்பதை குறிப்பிட்டார்.
இருவரும் காதலிக்க தொடங்கியது பற்றி பேசுகையில்.” 12வது படிக்கும்போது 'Orkut'-ல் ஆண்டனியை ஃபாலோ செய்தேன். ” என்று நெகிழ்ச்சியுடன் பகிந்திருந்தார்.