Maamannan New Poster: அட மிரட்டலா இருக்கே...! மாமன்னன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!
இன்று மாலை மாமன்னன் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நிலையில், படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மாமன்னன்:
பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இத்திரைப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. 110 நாட்கள் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இந்த மாதம் 29-ஆம் தேதி மாமன்னன் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பெரும் வரவேற்பு:
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், எச்.வினோத், முருகதாஸ், விஜயகுமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தேனாண்டாள் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாமன்னன் படத்தில் வடிவேலு பாடியிருக்கும் 'ராசாக்கண்ணு' பாடல் சமூக வலைதளத்தில் அதிக அளவில் ட்ரெண்ட் ஆனது.இப்பாடல் இத்தகைய வரவேற்பை பெற்றதற்கு வடிவேலுவின் குரலும், மெட்டமைப்பும்தான் முதன்மைக் காரணம். ஒப்பாரி வடிவிலான தாலாட்டாக வந்திருக்கும் இந்தப் பாடல் ஏராளமானோரை கவர்ந்தது.
ALSO READ | Adipurush Review: பிரபாஸின் அவதாரம் ஆதிபுருஷ்! ரசிகர்களுக்கு சந்தோஷமா? சங்கடமா? இதோ விமர்சனம்!
புதிய போஸ்டர்:
இந்த படம் குறித்து சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் படத்தில் தான் ஒரு கம்யூனிஸ்டாக நடித்திருப்பதாக கூறி இருந்தார். மேலும் ஷூட்டிங் தான் ஜாலியா இருந்துச்சி படம் சீரியசாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்து கருத்து வடிவேலுவின் குரலில் வெளியான பாடல் உள்ளிட்ட விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் மாமன்னன் படத்தில் புதிய போஸ்டரை பகிர்ந்து, படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.
The trailer of #MAAMANNAN will be released today at 6 PM. @mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @MShenbagamoort3 @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @NetflixIndia @teamaimpr pic.twitter.com/8ntwWIJ11c
— Udhay (@Udhaystalin) June 16, 2023