மேலும் அறிய

Kalaignar 100: கலைஞர் 100 விழாவில் காலியாக இருந்த இருக்கைகள்.. விஜய், அஜித் வராததுதான் காரணமா?

கலைஞர் கருணாநிதி திரைத்துறைக்கு ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பை சிறப்பிக்கும் வண்ணம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நடத்தப்பட்டது.

கலைஞர் 100 விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் கலந்து கொள்ளாத சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக உள்ளது. 

கலைஞர் 100 விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் திரைத்துறைக்கு ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பை சிறப்பிக்கும் வண்ணம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் இந்நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  பின் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக  ஜனவரி 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

வருகை தராத விஜய் - அஜித்

இந்நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் முன்னிலை வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தனுஷ், சூர்யா, நயன்தாரா,கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், வடிவேலு, ரோஜா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் அனைவரும் எதிர்பார்ப்பும் விஜய் - அஜித் இருவரும் பங்கேற்பார்களா? என்பதில் தான் இருந்தது. 

இதில் அஜித் எப்போதும் பொது நிகழ்ச்சியில் பெரிதும் கலந்து கொள்ளாதவர். கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகமே கலந்து கொண்டது. இதில் பேசிய அஜித், “இதுபோன்ற விழாவுக்கு தங்களை கட்டாயப்படுத்தி வரவைக்கிறார்கள்” என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இது திமுகவினர் இடையே மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என சொல்லப்பட்டது போலவே அஜித் வரவேயில்லை. 

அதேசமயம் விஜய், இதுபோன்ற ஆளும் கட்சி நிகழ்ச்சியில் எல்லாம் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் கலந்து கொள்வார். ஆனால் அவரே வராதது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் வருகையில் தீவிரம் காட்டும் விஜய், அதனை கருத்தில் கொண்டு வராமல் இருந்ததாக ஒரு பக்கம் இணையத்தில் தகவல் வெளியாகி வைரலானது. அதேசமயம் அவர் ஊரிலேயே இல்லை எனவும் கூறப்பட்டது. எது எப்படியோ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இல்லாமலேயே இந்த விழா முடிந்து விட்டது.

காலியாக இருந்த இருக்கைகள் 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது இருக்கைகள் காலியாக இருந்ததாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படி கூட்டமே இல்லாமல் கலைஞர் 100 நிகழ்ச்சி நடக்க விஜய்- அஜித் தான் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவரும் வருகை தந்திருந்தால் இந்நிகழ்ச்சி இப்படியே இருந்திருக்காது எனவும், கோலிவுட்டின் மாஸ் நடிகர்கள் யார் என்பது இப்போதாவது புரியட்டும் என சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளங்களை இரு நடிகர்களின் ரசிகர்களும் கருத்துகளால் நிரப்பி வருகின்றனர்.

ஆனால் நடந்தது என்ன?

ஆனால் சினிமா வட்டாரத்தில் வேறு விதமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ‘விஜய், அஜித் இருவரும் முதலிலேயே வருவது சந்தேகம் தான் என்பது தெரிந்த விஷயமாகி விட்டது. அதேசமயம் 22 ஆயிரம் பேர் அமரக்கூடிய கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் விழாவை நடத்துவது சர்வ சாதாரணம் இல்லை. மேலும் இது தயாரிப்பாளர் சங்கம் நடத்திய விழா என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பும் எழவில்லை. விழா மாலை 4 மணி முதல் 10 மணி வரை திட்டமிட்டப்பட்ட நிலையில் சற்று முடிய தாமதமாகி விட்டது. அதனால் ரஜினி, முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது சில பகுதிகளில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நேரமின்மை காரணமாக சென்றனர். அந்த பகுதியில் இருக்கும் புகைப்படங்கள்தான் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது’ என தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget