தப்பை சுட்டிக்காட்டிய ரஞ்சித்...திருத்திய கோபிநாத்..அணல் பறந்த இந்த வார நீயா நானா
இயக்குநர் பா ரஞ்சித் விமர்சித்ததைத் தொடர்ந்து நீயா நானாவின் நேற்றைய எபிசோடில் கோபிநாத் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

நீயா நானா
நீயா நானாவின் நேற்றைய ஏப்ரல் 27 ஆம் தேதி எபிசோட் ரசிகர்களிடம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகரத்து ஆண்களை திருமணம் செய்ய விரும்பு பெண்கள் மற்றும் கிராமத்து ஆண்களின் அம்மாக்கள் கலந்துகொண்டு உரையாடினார்கள். அப்போது நகரத்து வாழ்க்கையை விரும்பும் பெண்களைப் பார்த்து கோபிநாத் கேட்ட கேள்விகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
வெளுத்து வாங்கிய கோபிநாத்
நகரத்து ஆண்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களிடம் ஒரு பட்டியலின ஆணை கல்யாணம் செய்துகொள்வேன் என்பவரை கைதூக்கச் சொன்னார். அப்போது ஒருவர் கூட கை தூக்காததைப் பார்த்து கோபிநாத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஒருத்தர் கூட கை தூக்கவில்லை. கிராமத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் ஜாதியை விட்டு வெளியே வரமாட்றீங்க. திருமணம் உங்க தனிப்பட்ட முடிவு என்பதுதானே உங்களுடைய விருப்பமாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தனித்து சுயமாக சிந்திக்க கூடிய ஆளாக இருந்தவர்கள் அரை நிமிடத்தில் வீடு குடும்பம் என்பதை காரணமாக சொல்கிறீர்கள். ஒரு சமூக தான் உங்களை குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்துவதாக சொன்ன நீங்கள் இப்போ மட்டும் சமூகத்தை காரணமாக சொல்கிறீர்கள். சின்ன வயதில் இருந்து உங்கள் வீட்டில் சொன்ன எல்லாத்தையும் உடைத்த நீங்கள் இதை மட்டும் ஏன் உடைக்க கூடாது ? கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்று சொன்ன நீங்கள் யார். இதே மனநிலையோடு தான் நீங்கள் இருக்க போகிறீர்கள் என்றால் நகரம் என்ன கிராமம் என்ன ரெண்டும் ஒன்றுதான்." என கோபிநாத் படு ஆவேசமாக பேசியுள்ளது ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது
pic.twitter.com/uAzVC2QD2S
— Ranjini😇💛 (@LionizerLions) April 27, 2025
Today’s #NeeyaNaana episode left me deeply unsettled. When Gopinath asked the young women if they would marry someone from an SC/ST background, not a single hand went up. Moments like this are a stark reminder of how entrenched caste discrimination…
பா ரஞ்சித் விமர்சனத்தின் எதிரொலி
சமீபத்தில் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் நீயா நான நிகழ்ச்சியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய வார்த்தை பயண்படுத்தப்பட்டதாகவும் இதனை மியூட் செய்யாமல் அந்த நிகழ்ச்சி அப்படியே போட்டதை குறித்து அவர் தனது அதிருப்தியை தெரியப்படுத்தி இருந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் தனது தவறை சரி செய்துள்ளார் என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.





















