பெண்களுக்கு உதவும் நிதி சேமிப்பு டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

வேலை, குடும்பம் என்ற பொறுப்புகள் இருந்தாலும் சம்பளத்தில் சில பகுதியை சேமிப்பது மிகவும் அவசியம்.

50:30:20 விதி?

இந்த விதியானது உங்கள் சம்பாத்தியத்தை 3 முக்கிய பிரிவுகளாகப் பிரித்து பயன்படுத்துவதை குறிக்கிறது. இந்த விதியின்படி, உங்கள் சம்பளம் 50 சதவீதம், 30 சதவீதம், 20 சதவீதம் என 3 பகுதிகளாக பிரிக்கப் படுகிறது.

அவசியமான செலவுகளுக்காக 50 சதவீத சம்பளத்தை ஒதுக்குங்கள். வாடகை, மளிகைச் சாமான்கள், போக்குவரத்து கட்டணங்கள், மருத்துவம் போன்ற அத்தியாவசிய செலவுகள் இதில் அடங்கும்.

பொழுதுபோக்கு ஓய்வுநேர செலவுகளுக்காக இந்த 30 சதவீத சம்பளத்தை ஒதுக்கலாம். எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு 20% தொகையை பயன்படுத்துங்கள்.

சம்பளம், போனஸ், பிற வருமானம் என அனைத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டும். அதன் பிறகு, உங்கள் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்து எழுதிவைக்க வேண்டும்.

மாதாந்திர செலவுகளைப் பட்டியலிடுங்கள். மாத மாதம் உங்கள் செலவினங் களில், ஏதேனும் தொகையை குறைக்க முடியுமா என்பதையும் பாருங்கள். இதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளை எளிதில் அடைய முடியும்.

நீங்கள் வீடு வாங்க சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு உதவும் வகையில், உங்கள் செலவில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குங்கள்.

சிறிது சிறிதாக நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு தொகையும் உங்களுக்கு இருக்கும். பிற்காலத்தில் உதவிகரமானதாக
இருக்கும்.

வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.