NC 22: தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் நாகசைதன்யா படம்... முக்கியப் பாத்திரங்களில் நடிக்கும் அரவிந்த் சாமி, ப்ரியாமணி!
நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில் NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய படம் இதுவாகும்.

நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22 படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், நடிகை ப்ரியாமணி மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் ’NC 22’ படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தொடங்கியது.
தற்காலிகமாக ’NC 22’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில் NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய படம் ஆகும்.
View this post on Instagram
இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குறித்தான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுடைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த அரவிந்த்சாமி, சரத்குமார் ஆகியோரும் தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணியும் இந்த ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.
ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ள நிலையில், ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
View this post on Instagram
இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளது கூடுதல் சிறப்பாக இப்ப்படத்துக்கு அமைந்துள்ளது. பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி இப்படத்துக்கு வசனங்கள் எழுத, SR கதிர் ஒளிப்பதிவை கையாள்கிறார்.

