Valentine's Day 2022: கல்யாணம் பண்ணிக்கலாமா? படாரென போட்டுடைத்த நஸ்ரியா.! ஃபஹத் - நஸ்ரியா க்யூட் லவ் ஸ்டோரி!
பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் அடித்த பெங்களூர் டேஸ் படத்தில் நஸ்ரியாவும் , ஃபஹத்தும் ஜோடியாக நடித்தனர். அந்த பட சமயத்தில்தான் நஸ்ரியாவிற்கு ஃபஹத் மீது காதல் ஏற்பட்டிருக்கிறது.
மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த ஜோடி என்றால் அது நஸ்ரியா ஃபஹத் பாசில் ஜோடிதான். நஸ்ரியா ஃபஹத் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதிலும் நஸ்ரியாதான் ஃபஹத்திடம் காதலை தெரிவித்துள்ளார். நஸ்ரியா தமிழ் , மலையாளம் என படு பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சமயம் அது. அடுத்தடுத்து படங்களில் கமிட்டாவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நஸ்ரியாவின் திருமணம் சற்று ஷாக்கிங் சர்ப்ரைஸ்தான்.
2014 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபஹத் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் நஸ்ரியா. காந்த கண்ணழகன் என இன்று பெண் ரசிகைகள் கொண்டாரும் ஃபஹத் அந்த சமயத்தில் நஸ்ரியா அளவிற்கு பிரபலமான நடிகர் அல்ல. பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் அடித்த பெங்களூர் டேஸ் படத்தில் நஸ்ரியாவும் , ஃபஹத்தும் ஜோடியாக நடித்தனர். அந்த பட சமயத்தில்தான் நஸ்ரியாவிற்கு ஃபஹத் மீது காதல் ஏற்பட்டிருக்கிறது.
View this post on Instagram
ஹோட்டல் அறையில் தனியாக இருந்த ஃபஹத்திடம் , தன் பாணியில் வேகமாக வந்து “ டூட்..,என்னை திருமணம் செஞ்சுக்கிறீங்களா..வாழ்நாள் முழுக்க நல்லா பார்த்துப்பேன் “ என கேட்டிருக்கிறார் நஸ்ரியா. இதனை சற்றும் எதிர்பாராத ஃபஹத் திகைத்து போனாராம். நஸ்ரியா கேட்டது போல வேறு யாரும் தன்னிடம் அப்படியான கேள்வியை கேட்டதில்லை . நஸ்ரியா போன்ற நேர்மையான பெண்ணை நான் சந்தித்ததில்லை அதனால் உடனே திருமணம் செய்துக்கொண்டேன் என எஃப்.எம் நேர்காணல் ஒன்றில் ஷேர் செய்திருக்கிறார் ஃபஹத். சரி நஸ்ரியா ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவரை நான் கண்ட்ரோல் செய்யவில்லை. அவருக்கான சிறந்த கதை அமையும் பொழுது அவர் மீண்டும் சினிமா துறைக்கு வருவார் “ என தெரிவித்துள்ளார் ஃபஹத்.
View this post on Instagram