கனெக்ட் ப்ரீமியர் ஷோ... க்யூட்டாக வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி!
திருமணத்துக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பெரிதாக ஒன்றாகக் கலந்துகொள்ளாத நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கனெக்ட் பட ப்ரீமியர் ஷோவுக்கு இணைந்து க்யூட்டாக வந்திருந்தது அங்கிருந்தோரை பெரிதும் ஈர்த்தது.
'கனெக்ட்' படத்தின் பிரீமியர் ஷோ நேற்று (டிச.19) திரையிடப்பட்ட நிலையில், கணவர் விக்னேஷ் சிவனுடன் க்யூட்டாக வந்த நயன் தாராவின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
2015ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் உடன் நயன்தாரா மீண்டும் கைக்கோர்த்துள்ள படம் ’கனெக்ட்’. நடிகை நயன்தாரா ஹீரோயினை மையமாக வைத்து நடித்த முதல் படமாக மாயா அமைந்தது.
இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளன்று முன்னதாக 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியானது. தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஹாரர் ஜானர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்தது.
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் வினய், சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இந்தி சினிமாவின் அனுபவ நடிகர் அனுபம் கெர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இத்திரைப்படத்துக்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியும் ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். கொரோனா லாக் டவுன் சமயத்தில் நிகழும் சம்பவங்களைச் சுற்றி ஹாரர் திரைப்படமாக ’கனெக்ட்’ உருவாக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (டிச.22) இப்படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் 'கனெக்ட்' வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை, தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் நடைபெற்ற ப்ரீமியர் ஷோவில் நயன்தாராவும் அவரது கணவரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர்.
#Connect SPECIAL PREMIERE 🌟
— Rowdy Pictures (@Rowdy_Pictures) December 19, 2022
Lady Superstar #Nayanthara is all smiles with her entry here!@VigneshShivn #Nayanthara @AnupamPKher #Sathyaraj #VinayRai @haniyanafisa @Ashwin_saravana @SonyMusicSouth pic.twitter.com/3ikdiQcoyk
திருமணத்துக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பெரிதாக ஒன்றாகக் கலந்துகொள்ளாத நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கனெக்ட் பட ப்ரீமியர் ஷோவுக்கு இணைந்து க்யூட்டாக வந்திருந்தது அங்கிருந்தோரை பெரிதும் ஈர்த்தது.
#Connect - An Horror Film which happens during pandemic period. Sound & visuals were excellent and helps to create few scary moments. #Nayanthara has played the role of haunted girl’s mother with perfection. Releasing on 22nd Dec Worldwide
— Sathish Kumar M (@sathishmsk) December 19, 2022
pic.twitter.com/ro9azpK2dg
கிட்டத்தட்ட நானும் ரவுடி தான் காதம்பரி லுக்கில் வந்திருந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன.