Watch Video : பெண்களுக்கான ஆடை பிசினஸில் கால்பதித்த சூரரைப்போற்று பொம்மி.. வாழ்த்திய நயன்தாரா
Aparna Balamurali :பிசினஸ் உமனாக அடியெடுத்து வைக்கும் 'சூரரைப் போற்று' அபர்ணா பாலமுரளிக்கு வாழ்த்து சொன்ன நடிகை நயன்தாரா.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிஸியான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் 'சூரரைப் போற்று' திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
பிஸி ஷெட்யூல் :
நடிகை அபர்ணா பாலமுரளி 'சூரரைப் போற்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து வீட்ல விசேஷம், தீதும் நன்றும், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பிஸியாக இருப்பதை போலவே மலையாளத்திலும் மிகவும் பிஸியாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தற்போது தனுஷின் 50வது படமான D50 திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
சிறந்த பாடகி :
நடிகை அபர்ணா பாலமுரளி ஒரு சிறந்த நடிகை மட்டுமின்றி சிறந்த பாடகியும் கூட. 'இம்பாம்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக பின்னணி பாடகியாக அறிமுகமானார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அபர்ணா பாலமுரளி அவ்வப்போது தனது புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
புதிய பிசினஸ் :
நடிகை அபர்ணா பாலமுரளி தனது அடுத்த படியாக பிசினஸ் வுமனாக அடியெடுத்து வைத்துள்ளார். தனது புதிய ஆடை தொழில் ஒன்றை துவங்கியுள்ளார். அதன் மூலம் பெண்களுக்கான பிரத்யேகமான உடைகளை வடிவமைத்து வருகிறார். அதற்கு HYPSWAY என பெயரிட்டுள்ளார். அபர்ணாவின் இந்த புதிய முயற்சிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
View this post on Instagram
நயன்தாரா வாழ்த்து :
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அபர்ணா பாலமுரளியின் பிசினஸ் விளம்பர வீடியோவை பகிர்ந்து "உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் பிசினஸ் பயணம் :
நடிகை நயன்தாரா படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அவரும் ஒரு சக்சஸ்ஃபுல் பிசினஸ் உமனாக ஜொலித்து வருகிறார். ஏற்கனவே லிப் பாம் கம்பெனி ஒன்றை நடத்தி வரும் நயன்தாரா சமீபத்தில் 'ஃபெமி' என்ற பெயரில் சானிடரி நாப்கின் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அனைத்து தொழிலிலும் ஒரு பகுதியாக இருந்து வந்தாலும் அவரின் ஆதரவும் ஊக்கம் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி அதன் மூலம் ஏராளமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.
நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டியும் ஒரு பிசினஸ் உமனாக முன்னேறி வருவது ஒரு ஆரோக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அவர்கள் பல பெண்களுக்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறார்கள்.