Nayanthara Marriage Photo: மாங்கல்யத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்த நயன்தாரா; வெளியானது இரண்டாவது போட்டோ!
நயன் - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான், நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி, சரத்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது திருமணத்தின் முதல் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்கும் நயன் தாராவுக்கு உணர்வுப்பூர்வமாக முத்தமிடுகிறார் விக்னேஷ் சிவன். அதேபோல் திருமணத்தின் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நொடியை கேமராவில் க்ளிக் செய்து பகிர்ந்துள்ளனர். அந்த இரு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன
நயன் - விக்கி டும்..டும்..டும்.. Moment...https://t.co/wupaoCQKa2 | #VigneshSivan #Nayanthara #NayantharaVigneshShivan #NayantharaMarriage #WikiNayan #nayanwikki pic.twitter.com/41M8rv2lPK
— ABP Nadu (@abpnadu) June 9, 2022
திருமணம் முடிந்து இருவரும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கையில் டஜன் படங்கள் வேலையில் இருப்பதால் உடனடியாக நயன்தாரா ஷூட்டிங்கில் பங்கேற்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர், இந்தியில் ஷாருக்கான் உடன் ஜவான், ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் நடித்துள்ள ஓ2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
View this post on Instagram
நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது.
நானும் ரவுடி தான் மூலம் காதல் வயப்பட்ட இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். திருமணத்திற்கு பிறகு வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.