Nayanthara Marriage Photo: என் அன்பே!! தாலியுடன் நயன்!! காதலுடன் முத்தமிடும் விக்னேஷ்!! வெளியான திருமண புகைப்படம்!
தனது திருமணத்தின் முதல் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

நடிகர் நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான், நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி, சரத்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது திருமணத்தின் முதல் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்கும் நயன் தாராவுக்கு உணர்வுப்பூர்வமாக முத்தமிடுகிறார் விக்னேஷ் சிவன்.
On a scale of 10…
She’s Nayan & am the One ☝️☺️😍🥰
With God’s grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara ☺️😍🥰 #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8Fதற்போது வெளியாகியுள்ள விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண புகைப்படத்தில் அவர் பச்சை நிற நெத்திச்சூடி, கம்பல், செயின் ஆகியவை அணிந்திருந்தார். நயன்தாரா சிவப்பு நிற ஆடையும் விக்னேஷ் சிவன் வெள்ளை நிற ஆடையும் அணிந்திருந்தனர். இருவரும் கைகோர்த்தபடி விக்னேஷ் சிவன் நயன்தாரா தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022





















