Nayanthara Beauty Tips :அழகே! உன் அழகின் ரகசியம் இது தானோ? நயன்தாராவின் தேங்காய் எண்ணெய் சீக்ரெட் தெரிஞ்சுக்கலாம் வாங்க...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாராவின் அழகின் ரகசியத்திற்கு முக்கியமான காரணம் தேங்காய் எண்ணெய். அவரின் ஃபேவரட் DIY மாஸ்க் இதோ உங்களுக்காக

கோலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவின் அழகில் மயங்காதவர் யாரேனும் இருப்பார்களா என்ன? ரசிகர்கள் மட்டுமின்றி ரசிகைகளையும் கவர்ந்தவர் நயன். அவரின் அழகின் சீக்ரெட் பற்றி சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா தனது சரும பாதுகாப்பிற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுவதை காட்டிலும் பெரும்பாலும் இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்கவே விரும்புவார். அப்படி DIY பேக் மீது அவருக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இயற்கையான மாஸ்க் சிலவற்றை பயன் படுத்துவதன் மூலம் சருமம் மற்றும் கூந்தலை பாதுகாக்க முடியும். அப்படி நயன்தாரா பயன்படுத்தும் சில டிப்ஸ் இதோ உங்களுக்காக :
சருமத்திற்கு இயற்கையான சிறந்த மாய்ஸ்சரைசர் தேங்காய் எண்ணெய். அதில் உள்ள ஈரப்பதம் சருமத்தையும், முடியையும் ஊட்டமளிக்க தேவையான பண்புகளை கொண்டுள்ளது. இது நிச்சயமாக உங்களின் அன்றாட சரும பராமரிப்பு முறைகளில் இடம் பெற வேண்டும். சமையலில் பயன்படுத்துவதை போலவே தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். தேங்காய் எண்ணெய்யை மூன்று விதமாக பயன்படுத்தலாம்.
DIY 1:
தேங்காய் எண்ணெய் மற்றும் கேரட் பேஸ்ட் கலந்த மாஸ்க் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ சத்துக்களை கொடுக்கும். உங்களின் அன்றாட சமையலில் கேரட் பயன்படுத்துவதும் நலம் தரும். இந்த பேக் போட்டு கொள்ள நேரமோ அல்லது செலவு அதிகமாக ஆகாது. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 ஸ்பூன் கேரட் பேஸ்ட் கலந்து 10 நிமிடங்களுக்கு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பேக் போட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

DIY 2 :
தேங்காய் எண்ணெயுடன் தேன் கலந்து சருமத்திற்கு பேக் போடுவதால் அழகான பளபளப்பான சருமத்தை பெறுவது உறுதி. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1/2 ஸ்பூன் தேன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பேக் போட்டு 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுவதால் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக இருக்கும்.
DIY 3:
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி அழகான பளபளப்பான கூந்தலை பெற முடியும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஒரு கேப்ஸ்யூல் ஆகிய மூன்றையும் தலா 1 ஸ்பூன் எடுத்து கலந்து கொண்டு இதை முடியில் தடவி 10 நிமிடங்கள் சூடான ஒரு துணியால் கவர் செய்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்து விட வேண்டும். இந்த ஆர்கானிக் கலவை உங்கள் கூந்தல் மற்றும் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கும். முடி உடைதல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

