Watch Video | காலம் ஒரு துரோகி.. படுபாவி - ரத்தம் சொட்ட சொட்ட பேசிய நயன்தாரா.. ராக்கி ப்ரோமோ!!
"காலம் ஒரு துரோகி, படுபாவி, பிசினாரி. நேரம் ஒரு நோய், பிரபஞ்சம் சூழும் பொய்” சுத்தியலுடன் நயன்தாராவின் மிரட்டும் டயலாக்.
‘ராக்கி’ திரைப்படத்தில் நயன்தாரா ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளார். படத்தின் ப்ரோமோஷனுக்காக இதில் நயன்தாரா வருகிறார். ட்இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராக்கி. கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் கடந்தாண்டு வாங்கியது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, படம் வெளியாகமல் இருந்த நிலையில், வரும் 23ஆம் தேதி படம் தியேட்டரில் ரிலீசாகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘ காலம் ஒரு துரோகி’ என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் ப்ரோமோவில், நயன்தாரா, கையில் ஒரு சுத்தியலுடன் ரத்த வெறியுடன், "காலம் ஒரு துரோகி, படுபாவி, பிசினாரி. நேரம் ஒரு நோய், பிரபஞ்சம் சூழும் பொய்” என்று வசனம் பேசி மிரட்டுகிறார். இந்தப் ப்ரோமோவை பார்த்த பிறகு, முழு பாடலை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
"Kaalam Oru Dhrogi" - #Rocky Promo song featuring Lady Superstar NAYANTHARA will be out tomorrow..!#KaalamOruDhrogi #LadySueprstar #Nayanthara #RockyTheFilm #RockyFromDecember23 #RowdyPictures #RAstudios #RockyPromoSong pic.twitter.com/F3tWghGMf2
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) December 19, 2021
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்