Connect Movie: கனெக்ட்-கும் நயன்தாராவுக்கும் இதான் கனெக்ஷனா? மாயா படத்திலேயே ஹின்ட் கொடுத்த இயக்குனர்..!
Connect movie: நயன்தாராவின் குழந்தைக்கு ஆன்லைன் கேம் மூலம் பேய் பிடித்ததாகவும், அதை விரட்ட அனுபம் கெரை அழைத்துள்ளனர் இவை அனைத்தும் ஆன்லைனிலேயே நடப்பது போல கதை அமைந்துள்ளது.
மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். அஸ்வின் சரவனன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் தயாராகியுள்ள படம் கனெக்ட். விக்னேஷ் சிவனுடனான திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா வரிசைகட்டி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு தன் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் உடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார் நயன்தாரா.
மாயா வரிசையில் கனெக்ட் படமும் ஹாரர் படமாகவே உருவாகியுள்ளது. முன்னதாக நயன்தாரா நடித்த O2 படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், திரையரங்குகளில் ’கனெக்ட்’ வெளியாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் சத்யராஜ், வினய், அனுபம் கெர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதையின் கரு:
View this post on Instagram
நயன்தாராவின் பிறந்தநாளன்று, கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. லாக்டவுன் சமயத்தில் படத்தின் கதை நகர்வது போல் அமைத்துள்ளனர். நயன்தாராவின் குழந்தைக்கு ஆன்லைன் கேம் மூலம் பேய் பிடித்ததாகவும், அதை விரட்ட அனுபம் கெரை அழைத்துள்ளனர். இவை அனைத்தும் ஆன்லைனிலேயே நடப்பது போல கதை அமைந்துள்ளது.
மாயாவுக்கும் கனெக்டுக்கும் இருக்கும் ‘கனெக்ஷன்’:
மாயா படத்தில் நயன்தாரா கடனை அடைக்க ஒரு பேய் படத்தின் சேலஞ்சை ஒப்புக் கொள்வார். அப்படத்தை பார்க்க இருந்த சேலஞ்சுகள்: பயப்படாமல் இருக்க இதயத் துடிப்பு கண்காணிக்கப்படும், கண்களை மூடக் கூடாது, 90 நிமிட படத்தில் இடைவேளை இல்லாமல் பார்க்க வேண்டும்.
இதே சேலஞ்ச் பாணியில் உருவானது தான் கனெக்ட் படம். இப்படம் 90 நிமிடங்களுக்கு உருவாகியுள்ளது, இடைவேளை இப்படத்திலும் இல்லை. இப்படத்திற்க்கும் மாயாவுக்கிம் இருக்கும் கனெக்ஷன் எதார்த்தமாக அமைந்ததா இல்லை இப்படத்தின் ஹிண்ட்டை அப்போதே இயக்குநர் அஸ்வின் குடுத்தாரா என்பது கனெக்ட் பார்த்தால் தான் தெரியும்.
தமிழில் உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 22ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. கனெக்ட் படத்திற்கு, அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் செய்தியை கேட்டதில் இருந்து, நயன்தாராவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.