Nayanthara : பிரஷர் மாத்திரை இருக்கா... நயன்தாரா தோளில் தொங்கும் ஹெண்ட் பேக் விலை தெரியுமா...
Nayanthara : நடிகை நயன்தாராவின் பயண்படுத்தும் ஹேண்ட் பேகின் விலை குறித்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நயன்தாரா
நடிகை , தயாரிப்பாளர் , தொழிலதிபர் என கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா. அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் படப்பிடிப்பில் இருந்து வருகின்றன. இதில் சுந்தர் சி இயக்கும் முக்குத்தி அம்மன் 2 , கவின் நடிக்கும் ஹாய் மற்றும் மண்ணாங்கட்டி , ராக்காய் , டியர் ஸ்டுடெண்ட்ஸ் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. நயன் நடித்து கடைசியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் டெஸ்ட் திரைப்படம் வெளியானது. சினிமா தவிர்த்து நயன் என்கிற அழகு சாதன பொருட்களுக்கான சொந்த பிராண்டையும் நிர்வகித்து வருகிறார் நயன். தனிப்பட்ட வாழ்க்கையில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரு மகன்களுடன் சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
ஐரோப்பாவை சுற்றிப் பார்க்கும் நயன்தாரா
இந்நிலையில் நயன்தாரா தான் ஐரோப்பா சுற்றுலா சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் பார்த்த புகைப்படங்கள் தான் என்றாலும் புகைப்படத்தில் நயன்தாரா வைத்திருக்கும் ஹேண்ட் பேக் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் விலை பலருக்கு நெஞ்சு வலியையே கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
நயன்தாரா ஹேண்ட் பேக் விலை
View this post on Instagram
பிராடா என்கிற சர்வதேச பிராண்ட் ஹேண்ட் பேக் நயன்தாரா வைத்துள்ளார். இந்த ஹேண்ட் பேகின் விலை ரூ 1.93 லட்சம் என்பது குறிப்பிடத் தக்கது.






















