நயன்தாராவுக்கு இதயத்தைப் பறக்கவிட்ட ஜான்வி... நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்!
முன்னதாக தன் ’கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கான 'குட்லக் ஜெர்ரி’யில் நடித்த ஜான்வி கபூரை நயன்தாரா வாழ்த்தி இருந்தார்.

நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘கனெக்ட்’ படம் குறித்து ஜான்வி கபூர் பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
2015ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் உடன் நயன்தாரா மீண்டும் கைக்கோர்த்துள்ள படம் ’கனெக்ட்’. முன்னதாக நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்ப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் வினய், சத்யராஜ் ஆகியோ முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனுபம் கெர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
View this post on Instagram
இத்திரைப்படத்துக்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியும் ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகையான ஜான்வி கபூர் முன்னதாக கனெக்ட் படத்தின் ட்ரெய்லரை தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து படத்தைக் காண விரும்பும் தன் ஆவலை வெளிப்படுத்தியுள்ளார். விக்னேஷ் சிவனைக் குறிப்பிட்டு ஜான்வி கபூர் பட ட்ரெய்லரை பகிர்ந்துள்ள நிலையில், ஜான்விக்கு நன்றி தெரிவித்து விக்னேஷ் சிவனும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தன் ’கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கான 'குட்லக் ஜெர்ரி’யில் நடித்த ஜான்வி கபூரை நயன்தாரா வாழ்த்தி இருந்தார்.
கனெக்ட் படத்தின் ‘நான் வரைகிற வானம்’ எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





















