Nayanthara Vignesh Shivan : ஸ்பெயினுக்கு பறந்த நயன் - விக்கி.. திரும்பி வந்ததும் இதுதான் ப்ளான்.. ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்..
Nayanthara upcoming movies: இருவரும் சென்னை திரும்பியதும், ஷாரூக்கானுடன் ஜோடி சேர இருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் ஒரு ப்ராஜெக்ட் தொடங்கவுள்ளார்.
Nayanthara : மிகவும் பிஸியான ஷெட்யூல் நடுவில் ஒரு பிரேக்... நயன் - விக்கி ஐரோப்பா ட்ரிப்
தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோயின் நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. பல திரை நட்சத்திரங்கள் இந்த திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை மனதார வாழ்த்தினர்.
44வது செஸ் ஒலிம்பியாட்டில் விக்னேஷின் பங்கு:
திருமண முடிந்த கையேடு இருவரும் தாய்லாந்துக்கு ஒரு வாரம் சுற்றுலா சென்றனர். அதற்கு பிறகு இருவரும் தங்களது வேலைகளில் மிகவும் பிஸியாகி விட்டனர். 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை விக்னேஷ் சிவன் இயக்கினார். அப்போதும் நயன் தனது படங்களின் படப்பிடிப்பில் மும்மரமாக ஈடுபட்டு இருந்தார்.
View this post on Instagram
ஐரோப்பா ட்ரிப் :
சமீபத்திய தகவலின் படி விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஜோடியாக ஸ்பெயின் சென்றுள்ளார்கள். அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் 10 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளனர். இருவரும் சென்னை திருப்பிய உடன் இருவருக்கும் பிஸியான ஷெட்யூல் உள்ளது. ஷாருகான் நடிப்பில் உருவாக இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. அப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளார் நயன். மேலும் எஸ்ஆர்கே மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். அட்லீ இயக்கும் இப்படம் ஜூன் 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் இணைந்து ஒரு புதிய ப்ராஜெக்ட் தொடங்க உள்ளார் என கூறப்படுகிறது.
டாக்குமெண்டரி விரைவில் :
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ஒரு டாக்குமெண்டரியாக நெட்ஃபிக்ஸ் OTTயில் திரையிடப்படும். இந்த டாக்குமென்டரியின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு " நயன்தாரா மற்றும் விக்னேஷின் விசித்திரமான காதல் கதை ஒரு மேஜிக்கல் டாக்குமெண்டரியாக வெளியிடப்படவுள்ளது. இதற்கு 'பியோண்ட் தி ஃபேரிடேல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது விரைவில் நெட்ஃபிக்ஸ்ல் வெளியாகும்.
நயனின் மற்ற ப்ரொஜெக்ட்ஸ்:
பிருத்விராஜ் சுகுமாரனுக்கு ஜோடியாக "தங்கம்" திரைப்படத்தில் இணைய உள்ளார் நயன். அல்போன்ஸ் புத்திரன் எழுதி இயக்கிய இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதை தவிர நயன் ஜவான், காட்பாதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சல்மான் கான், சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடித்துள்ள படம் காட்பாதர். இது இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரை ரசிகர்களுக்கு நயன்தாரா அடுத்தடுத்து திரை விருந்தை படைக்க உள்ளார் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.