மேலும் அறிய

Navarasa | 9 உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘நவரசா’ டீசர்..

ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள் தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளார்கள்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ‘நவரசா’ ஆந்தாலாஜி வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுள் சினிமா துறையும் ஒன்று. இந்நிலையில் கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் ’ நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை  தென்னிந்திய சினிமா துறையினர் முன்னெடுத்துள்ளனர். நவரசங்களை அடிப்படையாக வைத்து ஒன்பது குறும்படமாக எடுக்கப்பட்ட இந்த தொடரை ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் ராய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் ஆகியோர் இயக்கியுள்ள இதில், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா  உள்ளிட்ட  முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். “நவரசா” ஆந்தாலஜி வெப் சீரிஸில் பணியாற்றிய கலைஞர்கள் யாரும் இதற்காக சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.

ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள் தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளா இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.

1.காதல் 

காதலை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு ’கிட்டார் கம்பி மேல நின்று ’ என பெயர் வைத்துள்ளனர். இதனை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாகவும், ப்ரயாகா மார்டின் கதாநாயகியாவும் நடித்துள்ளனர்.

2. கருணை 

கருணையை அடிப்படையாக  வைத்து உருவாக்கப்பட்ட கதைக்கு ’எதிரி’ என பெயரிட்டுள்ளனர்.இதனை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

3.சினம் 

கோபத்தை மையப்படுத்திய கதைக்கு ’ரௌத்திரம் ’என பெயரிடப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி இயக்கத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

4. அருவருப்பு 

அருவருப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை வஸந்த் சாய் இயக்கியுள்ளார். இதற்கு 'பாயசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

5.துணிவு 

துணிவை  மையப்படுத்தி உருவாகியுள்ள கதைக்கு . 'துணிந்த பின்' எனப் பெயரிடப்பட்டுள்து . இந்தப் குறும்படத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை  சர்ஜுன் இயக்கியுள்ளார். 

6.அச்சம்

பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள தொகுப்பை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இதற்கு 'இன்மை' எனப் பெயரிடப்பட்டுள்ளது . இதில் சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

7.அமைதி 

அமைதியை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு ‘பீஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர்  கெளதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

8.வியப்பு 

ஆச்சரியத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த பகுதியை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். 'ப்ராஜெக்ட் அக்னி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

9.நகைச்சுவை 

முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட இந்த குறும்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். 'சம்மர் ஆஃப் 92' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Embed widget