மேலும் அறிய

Mansoor Ali Khan: சிக்கலில் மன்சூர் அலிகான்.. த்ரிஷா பிரச்சினையில் ஆக்‌ஷன் எடுத்த தேசிய மகளிர் ஆணையம்..

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

த்ரிஷா பற்றிய பேச்சு

கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் “லியோ” படம் வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்த நிலையில், முக்கிய வேடத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். ”த்ரிஷாவுடன் நடிக்கப்போகிறோம் என்பதால் பெட்ரூம் சீன் எல்லாம் இருக்கும் என நினைத்ததாகவும், த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என மோசமான கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தார். இது கடும் கண்டனங்களை பெற்றது. 

கண்டனம் - விளக்கம் 

நடிகை த்ரிஷாவும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மன்சூர் அலிகான் பேச்சை கண்டித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டார். ”அவரின் பேச்சு அவமரியாதையான, பெண் வெறுப்புமிக்க, பாலியல் அத்துமீறல் குற்றமாகும்.இதுவரை இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இனியும் நடிக்க மாட்டேன்” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகை குஷ்பு உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் நடிகர் மன்சூர் அலிகான் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில், “திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க.  நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும். உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா.... நன்றி!” என தெரிவித்திருந்தார். ஆனால் மன்சூர் அலிகான் விளக்கத்திற்கும் எதிர்ப்புகள் எழுந்தது. 

தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை 

இந்நிலையில் நடிகை த்ரிஷா பற்றி அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நடிகை த்ரிஷாவை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் ஆணையம் தானாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்தி மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம். இதுபோன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகின்றன. இது கண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Embed widget