S J Suryah: பிறந்தநாளுக்கு வெளியான ஸ்பெஷல் அப்டேட்..போலீஸ் லுக்கில் நானி படத்தில் எஸ்.ஜே சூர்யா
நடிகர் நானியின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அவர் தெலுங்கில் நடித்து வரும் சரிபோதா சனிவாரம் படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது
எஸ்.ஜே சூர்யா
நடிகர் எஸ்.ஜே சூர்யா இன்று தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகராக வேண்டும் என்று ஆசையில் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். அஜித்துடன் வாலி , விஜயுடன் குஷி என அடுத்தடுத்த பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து பின் தன் படங்களை தானே தயாரித்து அதில் நடித்தார். இடைப்பட்ட காலத்தில் பெரியளவில் படங்களில் நடிக்காமல் இருந்த எஸ்.ஜே சூர்யாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி , சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தன. தொடர்ந்து மான்ஸ்டர் , டான் , மெர்சல் , வதந்தி , மார்க் ஆண்டனி , ஜிகர்தண்டா என இவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்கள் பேசப் பட்டன. தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோ வில்லன் என நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 , தனுஷ் நடித்துள்ள ராயன் , ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் , விக்ரம் நடிக்கு வீர தீர சூரன் , பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட படங்கள் தற்போது எஸ்.ஜே சூர்யா நடித்து வருகிறார். தெலுங்கில் தற்போது அவர் நடித்து வரும் படம் சரிபோதா சனிவாரம்.
சரிபோதா சனிவாரம்
సరితూగే సమరమే
— Nani (@NameisNani) July 20, 2024
సంహారం తథ్యమే
War is ON #NotATeaser https://t.co/4E912anyuy@iam_SJSuryah 🔥#SaripodhaaSanivaaram pic.twitter.com/gdAF1TAZO3
நானி நாயகனாக நடிக்கும் இப்படத்தை விக்ரம் ஆத்ரேயா இயக்குகிறார். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து அதிதி பாலன் , சாய் குமார் , சுபலேகா சுதாகர் உள்ளிட்டவர்கள் நடித்துவருகிறார்கள். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இன்று எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தில் இருந்து சின்ன வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் எஸ். ஜே சூர்யா போலீஸ் லுக்கில் தோன்றியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ராயன்
தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா , செல்வராகவன் , சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராமன் , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , சரவணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.