NC22: இளையராஜா - யுவன் மேஜிக்.. வெங்கட்பிரபுவுடன் கைகோர்த்த நாக சைதன்யா.. படப்பிடிப்பு எப்போது?
நாகசைதன்யா வெங்கட் பிரபு இணையும் NC22 படத்தின் தொடர்பான அப்டேட் வெளியாக இருக்கிறது.
நாகசைதன்யா வெங்கட்பிரபு இணையும் NC22 படத்தின் தொடர்பான அப்டேட் வெளியாக இருக்கிறது.
‘மாநாடு’, ‘மன்மதலீலை’ படங்களுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து இயக்கும் படம் NC22 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முன்னதாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்த நிலையில், இந்தப்படத்திற்காக மீண்டும் இருவரும் இணைந்து உள்ளனர்.
A dream come true moment for me!! Joining hands with my uncle (periyappa) #isaignani @ilaiyaraaja for the first time along with my brother @thisisysr for #NC22 #VP11 pic.twitter.com/OVzZS03T8B
— venkat prabhu (@vp_offl) June 23, 2022
வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களுக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்து இருக்கும் நிலையில், இந்தப்படத்தில் முதன்முறையாக அவரது பெரியப்பா இளையாராஜாவுடன் இணைந்திருப்பது மூலம் அவரின் கனவும் நிறைவேறி இருக்கிறது.
இந்தப்படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் நாகசைதன்யா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
View this post on Instagram
இந்த நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
With all ur love and blessings beginning my next #VP11 tomorrow with @chay_akkineni #NC22 @SS_Screens YES the shoot begins tomorrow @ilaiyaraaja @thisisysr pic.twitter.com/0ugXmSgDRD
— venkat prabhu (@vp_offl) September 20, 2022
இந்தப்படத்தில் நாக சைதன்யாவிற்கு வில்லனாக அருண்விஜய் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக பங்கராஜூ திரைப்படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்த க்ரித்தி ஷெட்டி இந்தப்படத்தில் ஜோடியாக நடிக்கிறாராம்.