மேலும் அறிய

Santhosh Narayanan: 'வெள்ளத்துக்கு அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசைதான் காரணம்' - கொந்தளித்த சந்தோஷ் நாராயணன்

மழை வெள்ளம் வரும் அளவுக்கு நான் இருக்கும் ஏரியா ஏரிப்பகுதியோ, தாழ்வான பகுதியோ இல்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தனது தாக்குதலை தொடுத்து விட்டு சென்றது. இதில் சூறைக்காற்றுடன் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்ததால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீருக்கு பிரபலங்களும் தப்பவில்லை. தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்ததாக நடிகர் விஷால், நடிகை கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

இப்படியான நிலையில் சந்தோஷ் நாராயணன் கடுமையாக புகார் ஒன்றை எக்ஸ் தளத்தில் வாயிலாக முன்வைத்துள்ளார்.  அதில், “தொடந்து 10 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சில வாரங்கள் வரை குறைந்தது முழங்கால் அளவு தண்ணீர் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குறைந்தப்பட்சம் 100 மணிநேரம் மின்வெட்டு என்பது கசப்பான  உண்மை நிலவரமாகும். இந்த ஆண்டு புதிய திட்டங்கள் கையாளப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கொளப்பாக்கம் என்று பெயரிடப்பட்ட எங்கள் பகுதி வரலாற்று ரீதியாக ஒரு ஏரியோ அல்லது 'தாழ்வான' பகுதியோ அல்ல.

சென்னையில் மற்ற எந்தப் இடங்களை விட எங்கள் பகுதியைச் சுற்றி ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவை மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்தது. அதுவும் ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புவாசிகளை பெரிதும் பாதிக்கிறது.

இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்படுவது மரண பயத்தை கண்முன் காட்டுகிறது. முடிந்த அளவுக்கு எனது பகுதி மக்களைச் சென்றடையவும், ஜெனரேட்டர் பேக்கப் மூலம்  தண்ணீர் டேங்குகளை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவுவது என அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் தண்ணீரை வெளியேற்றும் பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

நான் எங்கு சென்றாலும் காணும் நெகிழ்ச்சியான சம்பவங்களுக்காவும், பாசிட்டிவான எண்ணங்களாகவும் சென்னை மக்களின் மனதை பாராட்டுகிறேன். இதன்மூலம் தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட நீங்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என தெரிவிக்கிறேன். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா

ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?

TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

Embed widget