‛என்ஜாய் எஞ்சாமி... யாரால் உருவானது? அறிவு போட்ட பதிவுக்கு பதில் பதிவுபோட்ட சந்தோஷ் நாராயணன்!
2022ல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழிச்சியில் தீ மற்றும் கிடக்குழி மாரியம்மாளின் இந்த பாடலின்போது அறிவு இல்லாதது வருத்தம்.
Santosh Narayanan: "என்ஜாய் எஞ்சாமி"(Enjoy Enjaami) - பாடலின் வருமானம், உரிமையில் எங்கள் மூவருக்கும் பங்கு உண்டு - சந்தோஷ் நாராயணனின் ஓபன் ட்வீட்
திரையுலக இசையமைப்பாளர்களில் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவர் இசையமைத்த பீட்ஸா, சூது கவ்வும், வில்லா, ஜிகர்தண்டா, மெட்ராஸ் என பல படங்களில் பல இனிமையான பாடல்கள் மூலம் சினிமா ரசிகர்களை தன் வசம் இழுத்தவர்.
அந்த வகையில் தனது மகள் தீ பாடின என்ஜாய் எஞ்சாமி சுயாதீனப் பாடலுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ரௌடி பேபி பாடல் மூலம் புகழின் உச்சியை தொட்டவர் தீ. இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் இடம் பெற்ற அந்த பாடலை தீ பாடினார். அதில் உடன் பாடிய அறிவு பங்கேற்வில்லை . அவர் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதற்கு இன்று காலை காட்டமாக ஒரு பதிவை அறிவு பகிர்ந்திருந்தார். அதில் அவர் புறக்கணிப்பட்டதைப் போலவே கருத்து இருந்தது. இந்நிலையில், அந்த பாடலின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இதோ அந்த அறிக்கை:
" என்னுடைய நண்பர்கள், அன்பார்ந்த ஃபாலோவர்ஸ் மற்றும் நல விரும்பிகள் அனைவர்க்கும் நன்றி. நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் கடவுளை பிராத்திக்கிறேன். சினிமாவில் 2012ல் வெளியான என்னுடைய முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகள்.
என்ஜாய் எஞ்சாமி பாடலை பற்றி என்னுடைய பயணத்தை பற்றி நான் உங்களோடு பகிர விரும்புகிறேன்:
டிசம்பர் 2020ல், நமது நாட்டின் மகிமையை பற்றியும், இயற்கையை கொண்டாடும் வகையிலும் ஒரு தமிழ் பாடலை உருவாக்கும் யோசனையை தீ எடுத்து வந்தார். நான் அந்த பாடலுக்கு ப்ரோக்ராம் செய்து, இசையமைத்து இந்த என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி ரெகார்ட் செய்தோம். உலகளவில் என்னை தயாரிப்பாளர் என்று குறிப்பிடுகிறார்கள், ஏனெனில் அந்த இடத்தை பலர் ஏற்கனவே அறிந்து இருந்தார்கள்.
தீ, அறிவு மற்றும் நான் மூவரும் ஒன்றாக இணைந்து இந்த பாடலுக்காக இசையமைத்து, வசனம் எழுதி பாடவும் முடிவு செய்தோம். தீ மற்றும் அறிவு இந்த பாடலை பாட ஒப்புக்கொண்டு அதன் செயல்பாட்டை துவங்கினர். அவருடன் இணைந்து தீ பல இடங்களில் இசையமைக்கவும், அறிவு பாடல் வரிகளையும் எழுத ஒப்புக்கொண்டனர். மீதம் உள்ள பகுதிகளுக்கும், அறிவு பாடும் பகுதிகளுக்கும் நான் இசையமைத்தேன்.
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 1, 2022
இந்த தருணத்தில் காக்கா முட்டை, காதல் விவசாயம் போன்ற படங்களை இயற்றிய இயக்குனர் மணிகண்டனுக்கு நன்றி. அவர்தான் இந்த பாடலின் அடித்தளத்தை தேர்ந்து எடுத்து பாடல் வரிகளுக்கு ஒரு ஓட்டத்தையும் ஸ்கிரிப்டையும் உருவாக்கவும், நிஜ வாழ்க்கை கதைகளை ஊக்குவிக்கவும் உறுதுணையாய் இருந்தார். அதற்காக எங்கள் குழு அவருக்கு நன்றிகளை தெரிவிக்கிறது. மேலும் என்ஜாய் எஞ்சாமி பாடலின் அடிப்படையும், கலாச்சாரமும் அவருடைய திரைப்படமான "கடைசி விவசாயி" படத்தில் இருந்து தான் ஈர்க்கப்பட்டது.
பாடலில் இடம் பெற்ற ஒப்பாரி வரிகளுக்கு அரக்கோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் தாத்தா பாட்டிகளின் பங்களிப்பு. அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றிகள். பந்தலிலே பாவக்காய் தான் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரியமான ஒப்பாரிகளில் ஒன்றாகும்.
ரகிட்டா ரகிட்டா, என்னடி மாயாவி போன்ற என்னுடைய பாடல்களில் ஒரு குறிப்பு வார்த்தை இருக்கும் அது போல தான் என்ஜாய் எஞ்சாமி வார்த்தையும். இந்த பாடலை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பாடல் 30 மணி நேரத்திலேயே முடிக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு சில மணிநேரங்களே இருந்ததால் எங்கள் செயல்பாடுகளும் விரைவாக இருந்தன.
இந்த பாடலின் வருமானம் மற்றும் உரிமைகள் அனைத்தையும் தீ, அறிவு மற்றும் நான் சமமாக பகிர்ந்து கொள்ளப்பட்டதையும் நான் வெளிப்படையாக கூற விரும்புகிறேன். எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் பாரபட்சமின்றி அவர்களுக்கும் வரவு வைத்துள்ளேன். என்ஜாய் என்ஜாய் பாடல் வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய என்னுடைய பேச்சு அதற்கு சாட்சி.
2022ல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழிச்சியில் தீ மற்றும் கிடக்குழி மாரியம்மாளின் இந்த பாடலின் போது அறிவு இல்லாதது வருத்தம். அறிவு வேறு ஒரு நாட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்க நேர்ந்ததால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.
அறிவு ஒரு அற்புதமான கலைஞன். இயக்குனர் வெற்றிமாறனின் "அனல் மேல் பனித்துளி" திரைப்படத்தில் என்னுடைய இசையமைப்பில் " கீச்சே கீச்சே" பாடல் ஒன்றை பாடியுள்ளார் அறிவு.
ஒடுக்கப்பட்டவர்களுக்காக நான் என்றும் குரல் கொடுப்பேன். வீட்டிற்கு வெளியே நாம் பின்பற்றும் பணி நெறிமுறை, கலாச்சாரம் மற்றும் அனைத்து கலைஞர்கள் மீது இருக்கும் அன்பு இவை அனைத்தும் ஒரு சான்று.
வரவிற்கும் காலங்களில் உலகளவில் இருந்து வரும் புதிய குரல்களின் மூலம் வரும் இசையை ரசிக்க காத்திருப்போம். எனது நீண்ட உரையை படித்ததற்கு நன்றிகள் " என தனது நீண்ட குறிப்பினை முடித்தார் சந்தோஷ் நாராயணன்.