`நீரின்றி அமையாது உலகு!’ - சிறுமிகளின் விழிப்புணர்வு வீடியோவைப் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடகர் சிறுமிகளான ஸ்ரீ சகோதரிகளின் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பாடலைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய இசையமைப்பாளர்களுள் மிக முக்கியமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு பதிவுகளைத் தனது படைப்புகளில் இருந்தும், தனக்கு பிடித்தவற்றைப் பகிர்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பேசுபொருளாகி உள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடகர் சிறுமிகளான ஸ்ரீ சகோதரிகளின் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பாடலைப் பகிர்ந்துள்ளார். ஸ்ரீமதி, ஸ்ரீசக்தி ஆகிய இரு சகோதரிகளும் தொடர்ச்சியாக பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீ சகோதரிகள் இருவரும் இணைந்து தண்ணீரைப் பாதுகாப்பதும், பகிர்வதும் குறித்த விழிப்புணர்வு பற்றிய பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர். இந்தப் பாடல் வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ஸ்ரீ சகோதரிகள் இருவரும் `நீரின்றி அமையாது உலகு’ என்ற திருக்குறளுடன், பாடலையும் பாடி, தண்ணீரை அனைத்து உயிரினங்களுக்கும் பகிர்வது, பசியை ஒழிப்பது முதலான கருத்துகளையும் முன்வைத்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பதிவில், `இந்த இரு சகோதரிகளும் நம்மிடம் மிக முக்கியமான கேள்வியை இந்தப் பாடலின் மூலமாக கேட்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஏ.ஆர்.ரஹ்மான். இணையம் முழுவதும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்திருந்தன. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தற்போது போலவே நாகாலாந்து மாநிலத்தில் சிறுவன் ஒருவன் டிரம்ஸ் வைத்து இசையமைக்கும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த வீடியோவும் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram