தோற்றத்தில் தான் எளிமை...ஏ ஆர் ரஹ்மானின் சொத்து மதிப்பு கேட்டால் மிரண்டு போவீங்க
A R Rahman Net Worth : இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் பங்கலா , சொகுசு கார் , ஸ்டுடியோ ஆகியவற்றின் சொத்து மதிப்பு குறித்த விபரங்களைப் பார்க்கலாம்

ஏ.ஆர் ரஹ்மான்
தனது தந்தையின் இறப்பை தொடர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர் ரஹ்மான். தன் சக வயதினர் கல்லூரி படிப்பிற்காக ஓடிக் கொண்டிருந்தபோது ரஹ்மான் தனது ஸ்டுடியோவில் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ரஹ்மான் 1992 மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தின் ஆல்பம் திரையிசையை புதிய உச்சத்திற்கு கொண்டு சேர்த்தது. 7 தேசிய விருதுகள் , 2 ஆஸ்கர் விருதுகள், 1 கோல்டன் க்ளோப் விருது , பல ஃபிலிம்ஃபேர் விருதுகளை தனது வீட்டில் தனியறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளார் ரஹ்மான். ஒரு பக்கம் இசை ஜாம்பவானாக திகழும் ரஹ்மான் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரரும் கூட. அவருடைய சொத்து விபரங்களை கீழே பார்க்கலாம்
ரஹ்மானின் சென்னை பங்கலா
2005 ஆம் ஆண்டு ரஹ்மான் கோடம்பாக்கத்தில் பங்களா ஒன்றை வாங்கினார். இதற்குள்ளாக நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்டுடியோ ஒன்றையும் அமைத்துள்ளார். இன்றைய சூழலில் இந்த வீட்டில் மதிப்பு 15 கோடிகள் என கூறப்படுகிறது.
சொந்தமான ஸ்டுடியோக்கள்
தனது முதல் ஸ்டுடியோவை தனது வீட்டின் பின்புறத்தில் அமைத்தார். இதனைத் தொடர்ந்து ஏ.எம் ஸ்டுடியோவைத் தொடங்கினார். பல சர்வதேச கலைஞர்கள் வந்து போகும் ஒரு இடமாக இந்த இடம் அமைந்தது. சர்வதேச அளவிலும் ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டுடியோக்கள் இருந்து வருகின்றன. துபாயில் Firdaus Studio லண்டனில் KM Musiq ஆகிய ஸ்டுடியோக்களை ரஹ்மான் நிறுவியுள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரபல Abbey Road Studios பயண்படுத்துவதற்கு ரஹ்மானுக்கு சிறப்பு அனுமதி உள்ளது
லாஸ் எஞ்சலஸில் வீடு
2010 ஆம் ஆண்டு லாஸ் எஞ்சலஸில் ரஹ்மான் அடுக்கு மாடி வீடு ஒன்றை வாங்கினார். இந்த வீட்டின் இன்றைய மதிப்பு 25 கோடியாகும். சென்னையில் உள்ளது போலவே இந்த வீட்டிலும் ஸ்டுடியோ ஒன்றை வடிவமைத்துள்ளார் ரஹ்மான்.
ரஹ்மான் சொகுசு கார்கள்
ரஹ்மானிடம் 8 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பல சொகுசு கார்கள் உள்ளன.
மெர்சிடஸ் பென்ஸ் எஸ் - கிளாஸ் - 3 கோடி
ஜாக்வார் எக்ஸ்.எஃப் - 1.2 கோடி
வோல்வோ எக்ஸ்.சி90 - 1 கோடி
போர்ஷி டேகான் - 3 கோடி
ஒரு பாடலுக்கு 3 கோடி
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான். ஒரு பாடலுக்கு இசையமைக்க ரஹ்மான் 3 கோடி சம்பளமாக வங்குகிறார். இது தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு 1 மணி நேரத்திற்கு 1-2 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
ரஹ்மான் சொத்து மதிப்பு
ஏ ஆர் ரஹ்மானி மொத்த சொத்து மதிப்பு சுமார் 1728 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. 150 படங்களுக்கும் மேல் இசையமைத்து சர்வதேச அளவில் மதிக்கப்படும் இசைக்கலைஞராக இருக்கும் ரஹ்மான் தனது செல்வத்தை ஒருபோதும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. அதே நேரம் சர்வதேச இசை கலைஞர்களுடன் சேர்ந்து இந்திய இசைத் துறையை பல படி உயரத்திற்கு கொண்டு செல்லும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார் ரஹ்மான்.





















