மேலும் அறிய
Advertisement
Mrunal Thakur: இந்தப் படத்தில் நடிக்கும்போது தாய்மையின் வலி உணர்ந்தேன்: உணர்ச்சிவசப்பட்ட மிருணாள் தாக்கூர்!
Mrunal Thakur: ‘ஹாய் நான்னா’ படத்தில் ஒரு காட்சியில் நடித்த போது என்னை அது உணர்ச்சிவசப்படுத்தியது. அது ஏற்படுத்திய வலியையும் உணர்ச்சியையும் வார்த்தைகளால் சொல்லவே முடியாது - மிருணாள் தாகூர்
இன்று தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். இந்தி தொலைக்காட்சியில் பிரபலமான நடிகையாக இருந்த மிருணாள் தாகூர் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் அங்கு அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.
சீதா மகாலட்சுமியாக பிரபலம்:
அதற்குப் பிறகு தெலுங்கில் வெளியான 'சீதா ராமம்' படம் மூலம் மிருணாள் தாகூர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி, சீதா மஹாலட்சுமி என்றே அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு பிரபலமானார். ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் என ஏராளமானோரை ஈர்த்த மிருணாள் தாகூர், நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஹாய் நான்னா'. புதுமுக இயக்குநர் சவுரியா இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல், சென்டிமென்ட்டை மையமாக வைத்து வெளியான இந்த ஃபீல்குட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
எமோஷனலான மிருணாள் தாகூர்:
சமீபத்தில் மிருணாள் தாகூர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் 'ஹாய் நான்னா' படப்பிடிப்பின்போது அவர் எதிர்கொண்ட தனிப்பட்ட அனுபவம் குறித்து எமோஷனலாக பேசியிருந்தார். தான் ஒரு தாயாக இல்லை என்றாலும் தாய்மையின் வலியை உணர்ந்து ஒரு காட்சியில் நடித்தது குறித்து பகிர்ந்து இருந்தார். "ஹாய் நன்னா” படத்தில் ஹாஸ்பிடலில் ஒரு காட்சிபடமாக்கப்படும்போது உடல்நலக்குறைவுடன் பிறந்த குழந்தையை பார்க்கும்போது ஒரு தாயாக இல்லை என்றாலும் அந்த அனுபவம் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. உலகில் உள்ள எந்த தாயும் இது போன்ற ஒரு வேதனையை அனுபவிக்க கூடாது என நான் கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டேன்.
'ஹாய் நான்னா' படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் பூகம்பத்தில் தாய் ஒருவர் தன்னுடைய குழந்தையை இழந்து தவிக்கும் வீடியோ ஒன்றை யூடியூப்பில் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை உணர்ச்சிவசப்படுத்தியது. அது ஏற்படுத்திய வலியையும், உணர்ச்சியையும் வார்த்தைகளால் சொல்லவே முடியாது. என்னை வெகுவாக பாதித்த அந்தக் காட்சியில் இருந்து மீண்டு வர கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டது. இது வரையில் இப்படிப்பட்ட ஒரு கடினமான காட்சியில் நான் நடித்ததே கிடையாது. ஒரு நடிகராக இது போன்ற உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பது சவாலானது” எனக் கூறி இருந்தார் மிருணாள் தாகூர்.
அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :
'ஹாய் நன்னா' திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம். தற்போது இந்தியில் பூஜா மேரி ஜான், மற்றும் தெலுங்கில் 'பேமிலி ஸ்டார்' உள்ளிட்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் மிருணாள் தாகூர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion