Pathan Controversy: காவி சர்ச்சையில் சிக்கிய 'பதான்' பாடல் - போர் கொடி தூக்கிய பாஜக அமைச்சர்!
நடிகர் ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தின் 'பேஷரம் ரங்' பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. விவரம் உள்ளே

பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'பதான்'. ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ’பதான்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், பதான் திரைப்படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' சமீபத்தில் வெளியானது. பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே ஏராளமான வியூவ்ஸ் பெற்று பட்டையை கிளப்பியது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பேஷரம் ரங் :
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், 2023 ஜனவரி, 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எகிறியுள்ள நிலையில் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் தற்போது இந்த பாடல் ஒரு சர்ச்சையில் சிக்கி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
The film 'Pathaan' is full of faults & based on toxic mentality. Lyrics of song 'Besharam Rang' & saffron&green clothes worn in the song need to be corrected or else we will take decision on whether to let the film's screening happen in MP or not: MP Home Minister Narottam Mishra pic.twitter.com/csEl6jUd4t
— ANI (@ANI) December 14, 2022
சர்ச்சையில் சிக்கிய பதான் பட பாடல் :
பதான் படத்தில் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் கவர்ச்சியின் உச்சத்தில் தோற்றமளித்ததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பதான் படத்தின் இந்த பாடலில் ஷாருக்கான் - தீபிகா படுகோன் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி அமர்க்களமாக இருந்ததை ரசிகர்கள் பாராட்டினார்கள். ஆனால் தற்போது மத்திய பிரதேச அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா இப்பாடல் குறித்து சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
அதற்கு காரணம் இந்த பாடலில் காவி மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் பயன்படுத்தப்பட்டதை கண்ட அமைச்சர் கோபமடைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் சில தவறான மன நிலையை ஏற்படுத்த கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதால் அவை மாற்றப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்.
Actress wearing Saffron colored Bikini while the 'Pathan' feels her in the song name "BesharamRang".#BoycottPathan pic.twitter.com/9KxiF97wlt
— The Saffron Sena (@TheSaffronSena) December 12, 2022
இல்லையென்றால் இப்படம் மத்திய பிரதேசத்தில் திரையிடுவதில் சிக்கல் ஏற்படும். அப்படத்தை எங்கள் மாநிலத்தில் வெளியிடலாமா வேண்டாமா என்பதை பற்றி நாங்கள் யோசித்து முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா. இந்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















