Movies to watch on Pongal : இந்த பொங்கலுக்கு என்ன படம் பார்க்கலாம்? தியேட்டர் - ஓடிடி வெளியான படங்களின் பட்டியல் இதோ...
பொங்கலுக்கு என்னென்ன படங்கள் திரையரங்கங்களில் ரிலீஸாகி உள்ளன. ஓடிடியில் என்னென்னெ படங்களை பார்க்கலாம். விவரம் உள்ளே
பொங்கல் என்றாலே எப்படி சர்க்கரை பொங்கல், கரும்பு, புத்தாடை இவை எல்லாம் கண்டிப்பாக இருக்குமோ அதே போல பொங்கல் ரிலீஸ் திரைப்படங்களும் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு நிறைந்த ஒரு விஷயமாக இருக்கும். பொங்கலுக்கு என்ன படம் ரிலீஸ் ஆச்சு என்ன படம் பார்க்கலாம் என பலரும் ஆவலுடன் இருப்பார்கள். அவர்களுக்காக ஒரு தொகுப்பு:
திரையரங்க ரிலீஸ்கள் :
துணிவு :
ஜனவரி 11ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியான திரைப்படம் 'துணிவு'. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், ஜி.எம். சுந்தர், பிரேம்குமார், வீரா, சிபி சந்திரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு :
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வீர சிம்ஹா ரெட்டி :
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான தெலுங்கு திரைப்படம் வீர சிம்ஹா ரெட்டி.
வால்டர் வீரைய்யா :
கே.எஸ். ரவீந்திரன் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் ஜனவரி 13ம் தேதி தெலுங்கில் வெளியாகும் திரைப்படம் 'வால்டர் வீரைய்யா'. மேலும் இப்படத்தில் ரவி தேஜா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கல்யாணமும் கமணீயம் (Kalyanam Kamaneeyam) :
அனில் குமார் ஆலா இயக்கத்தில் ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'கல்யாணமும் கமனீயம்'. சந்தோஷ் ஷோபன், பிரியா பவானி சங்கர், பவித்ரா, தேவி பிரசாத் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
குட்டே (Kuttey) :
அர்ஜுன் கபூர், தபு, ராதிகா மதன், ஷர்துல் பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ள இந்தி திரைப்படம் Kuttey. இப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பிளேன் (Plane) :
Jean-Francois Richet இயக்கியுள்ள 'Plane' ஆங்கில திரைப்படம் ஜனவரி 13ம் வெளியானது. இப்படத்தில் ஜெரார்ட் பட்லர், மைக் கோல்டர், லில்லி க்ரூக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
M3GAN :
ஜெரார்ட் ஜான்ஸ்டோன் இயக்கத்தில் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆங்கில திரைப்படம் 'M3GAN'. இப்படத்தில் அமி டொனால்ட், ஜென்னா டேவிஸ், அலிசன் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் :
Lamborghini: The Man Behind the Legend - LIONSGATE PLAY
ராபர்ட் மோரெஸ்கோ இயக்கத்தில் உருவாகியுள்ள ஆங்கில படத்தில் ஃபிராங்க் கிரில்லோ, மீரா சர்வினோ, கேப்ரியல் பைர்ன் உள்ளிட்டோரின் நடிப்பில் ஜனவரி 13ம் தேதி LIONSGATE PLAY ஓடிடி வெளியான திரைப்படம் 'Lamborghini: The Man Behind the Legend'.
Dog gone - Netflix :
ராப் லோவ், கிம்பர்லி வில்லியம்ஸ், ஜானி பெர்ச்டோல்ட் ஆகியோரின் நடிப்பில் ஸ்டீபன் ஹெரேக் இயக்கத்தில் ஜனவரி 11ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியான ஆங்கில திரைப்படம் ' Dog gone'.
திரையரங்கங்களில் வெளியாகி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் படங்கள் :
லத்தி :
விஷால், சுனைனா நடிப்பில் வினோத் குமார் இயக்கத்தில் திரையரங்கங்களில் டிசம்பர் 22ம் தேதி வெளியான லத்தி திரைப்படம் ஜனவரி 14ம் தேதி முதல் SunNXT ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
முகுந்தன் உன்னி அஸோஸியேட்ஸ் (Mukundan Unni Associates) :
அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வினீத் ஸ்ரீனிவாசன், தன்வி ராம் நடித்திருந்த மலையாள திரைப்படமான 'முகுந்தன் உன்னி அஸோஸியேட்ஸ்' திரைப்படம் ஜனவரி 13ம் தேதி 'Hotstar' தளத்தில் வெளியானது.
Thattassery Koottam :
விஜயராகவன், சித்திக், ஸ்ரீலட்சுமி, அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'Thattassery Koottam' மலையாள படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் அனூப். இப்படம் ஜனவரி 13ம் தேதி zee5' ஓடிடி தளத்தில் வெளியானது.