மேலும் அறிய

Thunivu Update: தொடங்கியது ‘துணிவு’ சம்பவம்; கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய படக்குழு..!

துணிவு படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது; கடைசியாக அஜித் அறிமுகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கும் படம் துணிவு; போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது; அந்த வகையில் இன்று காலை 10 மணி முதல் துணிவு படத்தின் சம்பவம் தொடங்கிவிட்டது. 

Thunivu Update: தொடங்கியது  ‘துணிவு’  சம்பவம்; கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய படக்குழு..!

கதாபாத்திரங்கள் அறிமுகம் :

துணிவு படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்தது போல இன்று காலை முதல் இரவு வரை படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட உள்ளார்கள். அந்த வகையில் கதாபாத்திரங்களின் அறிமுகம் தற்போது துவங்கிவிட்டது. இது வரையில் நான்கு பேர் அறிமுகப்படுத்தப்பட்டுளனர். கடைசியாக அஜித்தின் அறிமுகம் வெளியாகும் என்ற அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

முதல் அறிமுகம் மோகன சுந்தரம் :

முதல் அறிவிப்பாக வெளியானது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரத்தின் கதாபாத்திரம்; இவரது கதாபாத்திரத்தின் பெயர் மைப்பா. தன்னுடைய நகைச்சுவையான பேச்சால் மக்கள் மூலம் மிகவும் பிரபலமான இவர் நடிப்பில் தற்போது இறங்கியுள்ளார்; ஐடி கார்டு போட்டபடி இருக்கும் இவரின் அறிமுகம் ஒரு ஊழியராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என யூகிக்கப்படுகிறது. 

அடுத்த அப்டேட் :

இரண்டாவது அறிமுகம் அனைவருக்கும் மிகவும் பிரபலமான பக்ஸ். இவர் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார்; இவரின் உடையே இவர் ஓரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது; அடுத்த அறிமுகம் நடிகர் பிரேம்; இவர் பிரேம் என்ற கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார் எனும் அறிவிப்பை போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அடுத்தாக வெளியாகியுள்ள போஸ்டர் ஜான் கொக்கன். இவர் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இறுதியாக அஜித் அறிமுகத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.

வரவிற்கும் அப்டேட் :

மேலும் துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்; அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டில் இவர்களின் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; பொங்கலுக்கு வெளியாக தயாராக இருக்கும் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். 

பாடல்கள் சூப்பர் ஹிட் :

ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது; நடிகர் அஜித் நடிப்பில் இதுவரையில் வெளியான எந்த படத்தின் கதாபாத்திரங்களும் படத்தின் ரிலீசுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியதில்லை. படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget