This Week Movie Release: நாளை ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்.. என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் நாளை என்னென்ன திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற தகவலை பார்க்கலாம்.
![This Week Movie Release: நாளை ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்.. என்னென்ன? வாங்க பார்க்கலாம்..! Movie Release February 3rd New Tamil Releases Run Baby Run Michael The Great Indian Kitchen Check Full List This Week Movie Release: நாளை ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்.. என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/01/08c7f0b093a986b28c7573fd58a9b22b1675267630215572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக நாளை (பிப்ரவரி 3) ஒரே நாளில் 7 படங்கள் வெளியாகவுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் நாளை (பிப்ரவரி 3) என்னென்ன திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற தகவல் இதோ உங்களுக்காக:
1.மைக்கேல்
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'மைக்கேல்'. மாநகரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுகளை குவித்த சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை தயாரிக்கிறார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்ரீனிவாஸ்.
மைக்கேல் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக கெத்தாக நடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பான் இந்திய திரைப்பமாக உருவாகியுள்ள இப்படத்தில் திவ்யன்ஷா கௌசிக், வரலக்ஷ்மி சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ்.
2. பொம்மை நாயகி
பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் தான் பொம்பை நாயகி. நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் பொம்மை நாயகி. இப்படத்தில் சிறுமி ஸ்ரீமதி, யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் ஷான்.கே.எஸ்.சுந்தரமூர்த்தி.
இந்த படமானது தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை அழுத்தமாக பேச முயற்சிப்பதை உணர்த்துகிறது. யோகி பாபுவை நகைச்சுவை கதாபாத்திரங்களில் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு இது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
3.நான் கடவுள் இல்லை
நடிகர் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், சரவணம், இனியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் நான் கடவுள் இல்லை. இந்த படத்தை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். நீண்டு காலங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டோர் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். படத்தில் இமான் அண்ணாச்சியும் காமெடி களத்தில் இறங்கியுள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து இயக்கப்பட்ட இந்த படம் பிப்ரவரி 3ல் (நாளை) திரையரங்களில் வெளியாக உள்ளது. நீண்ட காலங்களுக்கு பின், இயக்குநராக அவதாரம் எடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை இயக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
4.குற்றப் பின்னணி
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் தான் குற்றப் பின்னணி. இந்த படத்தில் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டரில் நடித்த சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். என்.பி.இஸ்மாயில் இயக்கிய இந்த படத்தில் தீபாளி, தாட்சாயிணி, சிவா, ஹனிபா என பலரும் நடித்துள்ளனர்.
பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான் குற்றப் பின்னணி. நடிகர் சரவணனை திரில்லர் படத்தில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5.தலைக்கூத்தல்
லென்ஸ் என்ற படத்தை இயக்கி கவனம் பெற்ற ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் தலைக்கூத்தல். ஓய்நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரகனி, வசுந்தரா, கதிர், வையாபுரி, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படமானது தென் தமிழகத்தில் அதிகமாக நடக்கும் வயது முதியவர்களை சொந்த குடும்பத்தினரை கருணை கொலை செய்வதை மையமாக கொண்டு இயக்கப்பட படம் தலைக்கூத்தல்.
6.ரன் பேபி ரன்
ஆர்.கே.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ரன் பேபி ரன். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதி வெங்கட், விவேக் பிரசன்னா, ராதிகா சரத்குமார், பகவதி பெருமாள் என ஏராளமானோர் நடித்துள்ளனர். த்ரில்லர் கதையாக இருக்கு இந்த படத்தில் ஆர்.கே.பாலாஜி நடித்துள்ளது ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஒரு பெண்ணின் கொலையைப் பற்றி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
7.தி கிரேட் இந்தியன் கிச்சன்
நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட திரைப்படம் ' தி கிரேட் இந்தியன் கிச்சன் '. பெண்களின் இல்லற வாழ்வில் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது என ஆண்கள் நினைத்துக் கொண்டு அடிமைப்படுத்தும் அவலத்தையும், பெண்களது நிலைமையை புரிந்து கொள்ளாது ஆண்கள் வக்கிரமாக நடந்து கொள்வதையும் இத்திரைப்படம் பேசியது.
தமிழில் இந்தப் படத்தை, ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இந்த படத்தை ரீமேக் செய்துள்ளார். நிமிஷா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரோடு பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெர்ரிசில்வஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)