மேலும் அறிய

Indian 2 Box Office :என்ன ஆனது இந்தியன் 2வின் 4வது நாள் வசூல் நிலவரம்? உயர்வா? சரிவா?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் நான்காவது நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதல் தமிழ்நாடு  மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படம் வெளியானது முதல் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப் பட்டாலும் இந்தியன் 2 திரைப்படம் காட்சியமைப்புகளிலும் வசனங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவரும் விதமாக இல்லாதது படத்தின் மிகப்பெரிய பின்னடைவாக கருதப் படுகிறது. மேலும் படத்தின் நீளம் பார்வையாளர்களை சோர்வடையச் செய்வதாக சமூக வலைதளங்களில் ஒருமித்த கருத்துக்கள் பகிரப் பட்டு வந்தன. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தியன் 2 படத்தின் காட்சிகளை மீண்டும் எடிட் செய்து 20 நிமிட காட்சிகளை நீக்கி படத்தின் நீளத்தை சுருக்கியுள்ளது படக்குழு. 

இந்தியன் 2 வசூல் 

கடந்த வியாழக்கிழமை இந்தியன் 2 வெளியான நிலையில் நேற்று முன் தினமான ஞாயிற்று கிழமை (ஜூலை 14) வரை ரசிகர்கள் திரளாக திரையரங்குகளுக்கு வந்து கொண்டிருந்தனர். இதனால் படம் முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் 105 கோடி வசூலித்திருந்த நிலையில் இந்தியன்  2 திரைப்படம் 109 கோடி வசூலித்து இந்த ஆண்டில் அதிகம் வசூல் ஈட்டிய படமாக இடம்பெற்றது. 

இந்நிலையில் விடுமுறை நாட்கள் முடிந்து திங்கட்கிழமையான நேற்று (ஜூலை 15) வேலை நாட்கள் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துள்ளது. இதனால் முதல் மூன்று நாட்களுடன் ஒப்பிடும் போது படத்தின் வசூல் குறைந்துள்ளது. நான்காவது நாளாக இந்தியன் 2 படம் இந்தியவில் 3 முதல் 5 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்தியன் 2 படத்தின் வசூல் குறித்த அதிகாரப் பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில் படத்தின் வசூல் பற்றிய  பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. 


மேலும் படிக்க : Viduthalai 2 First look: மீண்டும் வருகிறார் பெருமாள் வாத்தியார்! நாளை வெளியாகிறது 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Siragadikka Aasai Serial July 16 : பயத்தில் உதறும் விஜயா மனோஜ்... பார்வதி கொடுத்த ஐடியா என்ன? சிறகடிக்க ஆசையில் இன்று

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget