Bakasuran Teaser: மீண்டும் சர்ச்சை டாப்பிக்.. மிரட்டும் செல்வராகவன்.. வெளியானது ‘பகாசூரன்’ டீசர்!
பிரபல இயக்குநர் செல்வராகவன் மற்றும் நட்டி நாகராஜ் நடித்துள்ள 'பகாசூரன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் செல்வராகவன் மற்றும் நட்டி நாகராஜ் நடித்துள்ள 'பகாசூரன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் பகாசூரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.
#Bakasuran first look 🤩
— selvaraghavan (@selvaraghavan) August 26, 2022
Hope you all like it ! @mohandreamer @natty_nataraj @SamCSmusic @Gmfilmcorporat1 pic.twitter.com/gkJ3yJjJ4D
மேலும், படத்தின் டீசர் வரும் 28-ந் தேதி ( இன்று ) வெளியாகும் என்று அறிவித்தார். அதன் படி தற்போது டீசர் வெளியாகியுள்ளது. சர்ச்சைக்கு பேர் போன இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நாகராஜ் செல்வராகவனுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ மூலமாக இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிய ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ரதாண்டவம்’ படங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பதாக வெளியான அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தேவராஜ் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குனராக எஸ்.கே. பணியாற்றறுகிறார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.
View this post on Instagram
பிரபல இயக்குனர் செல்வராகவன் ‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல்படத்திலே தமிழ் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரைப்படங்களை விருந்தாக்கினார். இறுதியாக செல்வராகவன் நடிப்பில் ‘ நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியான நிலையில், தற்போது தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.