Mohan G: கடவுள் நம்பிக்கை இருக்குன்னு காட்ட பயம்.. தமிழ் ஹீரோக்களை சாடிய மோகன் ஜி!
தமிழ்நாட்டில் இன்று உள்ள பல கதாநாயகர்கள் இந்த மாதிரி ஒரு போஸ்டர் விடவே பயப்படுவார்கள். பலருக்கு திரையில் இறை நம்பிக்கை ஆகவே ஆகாது என இயக்குநர் மோகன் ஜி கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று உள்ள பல கதாநாயகர்களுக்கு திரையில் இறை நம்பிக்கை ஆகவே ஆகாது என இயக்குநர் மோகன் ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் ஐகானிக் ஸ்டார் என அழைக்கப்படுவர் அல்லு அர்ஜூன். இவர் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் அல்லு அர்ஜூன், முன்னணி இயக்குநரான த்ரி விக்ரமுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.
அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் த்ரி விக்ரம் இணை முன்னதாக அல வைகுந்தபுரமுலு படத்தில் இணைந்திருந்தது. ஏற்கனவே ஜூலாய், S/O சத்தியமூர்த்தி ஆகிய படங்களும் இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு அல வைகுந்தபுரமுலு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.
இதுதொடர்பாக ஒரு போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் முருகன் வேடத்தில் அல்லு அர்ஜூன் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. த்ரி விக்ரமின் அந்த படம் புராணக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு பேசிய இயக்குநர் மோகன் ஜி, “முருகா.. தமிழ்நாட்டில் இன்று உள்ள பல கதாநாயகர்கள் இந்த மாதிரி ஒரு போஸ்டர் விடவே பயப்படுவார்கள்.. பலருக்கு திரையில் இறை நம்பிக்கை ஆகவே ஆகாது.. அல்லு அர்ஜுன் சார் இப்படி நடிப்பது எங்களுக்கு பெருமையே” என தெரிவித்துள்ளார்.
முருகா❤️❤️❤️.. தமிழ்நாட்டில் இன்று உள்ள பல கதாநாயகர்கள் இந்த மாதிரி ஒரு போஸ்டர் விடவே பயப்படுவார்கள்.. பலருக்கு திரையில் இறை நம்பிக்கை ஆகவே ஆகாது.. அல்லு அர்ஜுன் சார் இப்படி நடிப்பது எங்களுக்கு பெருமையே 💥💥💥 https://t.co/DlW9Ia9I9C
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 3, 2026
இது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தொடர்பான பதிவை வெளியிட்ட அவர் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் நீக்கியுள்ளார். இப்படியான நிலையில் இணையவாசிகள் மோகன் ஜியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில், “தமிழ் கடவுள் முருகனை வைத்து கொல்டிங்க படம் எடுத்து நாசம் பண்ண போறாணுங்க அத எதிர்க்காம வாழ்த்துக்கள் சொல்லிட்டு இருக்கீங்க?” என ஒருவர் கேட்க, “அதற்கு அவங்க தப்பா எடுக்க மாட்டங்க.. உள்ளூர்ல தீபம் ஏற்ற கூட குரல் கொடுக்க ஒரு நடிகர் இல்ல” என மோகன் ஜி பதிலளித்துள்ளார்.
தலைவர் ரியலாவே போஸ்டர் விடுவார் புரோ என ரஜினிகாந்த் வேலுடன் இருக்கும் புகைப்படத்தை ஒருவர் வெளியிட, அதில் இன்று உள்ள நடிகர்கள் சகோ.. இவரு பல சம்பவங்கள் பண்ணிட்டாரு என மோகன் ஜி ஃபயர் எமோஜி விட்டுள்ளார்.





















