Sri Gouri Priya: ‘தோழியின் அண்ணனை சைட் அடிச்சேன்’ ... நினைவுகளை பகிர்ந்த ‘லாலாகுண்டா பொம்மை’ ஸ்ரீ கௌரி பிரியா..!
மார்டன் லவ் சென்னை படத்தில் நடித்த நடிகை ஸ்ரீ கௌரி பிரியா தனது இருந்த முதல் காதல் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
![Sri Gouri Priya: ‘தோழியின் அண்ணனை சைட் அடிச்சேன்’ ... நினைவுகளை பகிர்ந்த ‘லாலாகுண்டா பொம்மை’ ஸ்ரீ கௌரி பிரியா..! Modern love chennai Actress Sri Gouri Priya shared his crush story Sri Gouri Priya: ‘தோழியின் அண்ணனை சைட் அடிச்சேன்’ ... நினைவுகளை பகிர்ந்த ‘லாலாகுண்டா பொம்மை’ ஸ்ரீ கௌரி பிரியா..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/29/5af1e0f205986843cdd5abc71b23d2c51685357576461572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மார்டன் லவ் சென்னை படத்தில் நடித்த நடிகை ஸ்ரீ கௌரி பிரியா தனது இருந்த முதல் காதல் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாவக்கதைகள், புத்தம் புது காலை, சில்லுக்கருப்பட்டி போன்ற ஆந்தாலஜி பட வரிசையில் சமீபத்தில் மாடர்ன் லவ் சென்னை (Modern Love Chennai) படம் வெளியானது. இந்த படத்தில் மொத்தம் 6 எபிசோட் உள்ளது. இதில் ராஜூ முருகன் “லாலா குண்டா பொம்மைகள்” என்ற எபிசோடை இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார்.
தோழியின் அண்ணன் மீது விருப்பம்
இதனிடையே நேர்காணல் ஒன்றில் அவர், எப்படி இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி பேசியுள்ளார். அதில் நான் தெலுங்கில் மெயில் என ஒரு படம் பண்ணியிருந்தேன். அது ஆஹா ஓடிடி தளத்தில் உள்ளது. அதனை பார்த்துவிட்டு தான் ராஜூ முருகன் என்னை அணுகியிருப்பார் என நினைக்கிறேன். எனக்கு ஹைதராபாத் என்பதால் அவர் எனக்கு ஆடிஷனுக்கான காட்சியை அனுப்பியிருந்தார். அப்படி தான் இப்படத்தில் நடித்தது.
லாலாகுண்டா பொம்மைகள் படத்தின் கதை ஷூட்டிங் முன்னாடியே எனக்கு தெரியும். அந்த பெயருக்கு காரணம் இந்த உலகத்தில் நானும் ஒரு பொம்மை மாதிரி என்பது தான். அந்த எபிசோட் பார்த்துவிட்டு ரசிகர்கள் பார்த்துவிட்டு கமெண்ட் செய்ததை ட்விட்டரில் பார்த்தேன். என்னை பொறுத்தவரை காதல் என்பது ஒரு அன்பு, சுலபமான வலி,முக்கியமான நெகிழ்ச்சி என்பது தான்.
மேலும் காதல் என்பது மிகப்பெரிய வார்த்தை. எனக்கு என்னுடைய தோழி ஒருவரின் அண்ணன் மீது விருப்பம் இருந்தது. பள்ளியில் படிக்கும் போது சேர்ந்து படிப்பதற்காக அவள் வீட்டுக்கு போகும் போது அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது. காரணம் பள்ளி, கல்லூரி எல்லாமே பெண்கள் மட்டுமே படிக்கும் இடமாக அமைந்தது தான். என்னுடைய அம்மா, அப்பா ரொம்ப கூலான பெற்றோர்கள். நான் ஒரே ஒரு பொண்ணு தான். அதனால் அதிக செல்லம், நண்பர்கள் மாதிரி பழகுவாங்க.
என்னிடம் இதுவரை பழகியவர்கள் எல்லாரும் கண்ணியமாக நடந்துள்ளார்கள். நாம் நம்முடைய லிமிட்டில் இருந்தால் நல்லது. நாம் அவர்களை உத்வேகம் கொடுத்தால் அட்வான்டேஜ் எடுக்கத்தான் செய்வார்கள” என தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த மாடர்ன் லவ்
மாடர்ன் லவ் சென்னை படத்தில் மொத்தம் 6 எபிசோடுகள் உள்ளது. இதில் ரிது வர்மா, அசோக் செல்வன், ரம்யா நம்பீசன், வாமிகா, ஸ்ரீ கௌரி பிரியா, சம்யுக்தா விஸ்வநாதன், டி.ஜே.பானு, சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், வாசுதேவன் முரளி, வசுந்தரா, கிஷோர், விஜயலட்சுமி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளனர். பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய் சுந்தர், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இதனை இயக்கியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)