(Source: ECI/ABP News/ABP Majha)
"ப்ராவின் அளவை கடவுள் அளவெடுக்கிறார்.." : பூதாகரமாக வெடித்த நடிகையின் பேச்சு..
ஸ்வேதா திவாரி பேசியது குறித்து 24 மணிநேரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அம்மாநிலத்தின் அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை ஸ்வேதா திவாரி. கடந்த 2011ஆம் ஆண்டு பிக்பாஸ் டைட்டிலை வென்ற இவர், அதன்பிறகு பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில், 'ஷோ ஸ்டாப்பர்'' என்ற வெப் சீரிஸில் ஸ்வேதா திவாரி நடிக்கிறார். 41 வயதான ஸ்வேதாவும், அந்த வெப் சீரிஸை உருவாக்கிய குழுவில் இருப்பவர்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு ஒன்று மத்திய பிரதேச மாநிலம் போபலில் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கிடையே, பிரபலமான 'மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் இந்து கடவுளான கிருஷ்ணர் வேடத்தில் நடிக்கும் நடிகர் சௌரப் ஜெய்ன், ஃபேஷன் ஷோ பற்றிய ''ஷோ ஸ்டாப்பர்'' தொடரில் மாடல்களுக்கு உள்ளாடை பொருத்தும் வேடத்தில் நடிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில் கௌரப் ஜெயினை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசிய ஸ்வேதா திவாரி, ''கடவுள் எனது ப்ராவை அளவெடுக்கிறார்'' என்று கூறியதாக தெரிகிறது.. அவர் அவ்வாறு பேசியது சமூக ஊடகங்களில் வைரலானது. அதேசமயம் ஸ்வேதா திவாரி இந்து கடவுளை அவமதித்துவிட்டார். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென ஒரு தரப்பினர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்வேதா திவாரி பேசியது குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்க அம்மாநிலத்தின் அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். மேலும் போபால் போலீஸ் கமிஷனரிடம் முழு விவகாரம் குறித்து அறிக்கையும் கேட்டுள்ளார்.
முன்னதாக, சன்னி லியோன் நடனத்தில் 'சரிகமா மியூசிக்' நிறுவனம் வெளியிட்ட ''மதுபன் மே ராதிகா'' எனும் பாடல் காணொளியை மூன்று நாட்களுக்குள் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் நரோத்தம் மிஸ்ரா கெடு விதித்த பின், அப்பாடல் இணையத்திலிருந்து நீக்கப்பட்டது.
அதேபோல் தன்பால் ஈர்ப்பில் இருக்கும் இரண்டு பெண்கள் இந்துக்கள் கொண்டாடும் 'கர்வா சவுத்' விழாவைக் கொண்டாடுவதை காட்டும் வகையில் சென்ற ஆண்டு வெளியான டாபர் நிறுவனத்தின் விளம்பரத்துக்கு எதிர்ப்பு எழுந்து. அப்போது நரோத்தம் மிஸ்ரா டாபர் நிறுவனத்தை கண்டித்திருந்தார். அதன்பின்பு டாபர் நிறுவனம் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்