மேலும் அறிய

Meera mithun | ‛நான் லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனரா இருந்தப்போ...’ - ‛கம்பிகட்டிய’ மீரா மிதுன்

Meera mithun | காவல்துறையின் கிளியரன்ஸ் சான்றிதழ் கிடைக்காததால் தன்னால் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மீரா மிதுன் மைக்கைப் பிடித்தாலே அதில் சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில் அண்மையில் அவர் தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக இருந்ததாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளது. அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Meera mithun | ‛நான் லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனரா இருந்தப்போ...’ - ‛கம்பிகட்டிய’ மீரா மிதுன்

யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ள அவர் மிகத் தெளிவாகத் தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக சில நாட்கள் இருந்ததாகவும் ஆனால் அந்த சமயமும் தன் மீது வழக்குகள் போடப்பட்டதாகவும்.மேலும் காவல்துறையின் கிளியரன்ஸ் சான்றிதழ் கிடைக்காததால் தன்னால் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் தான் பேசுவதெல்லாம் திரித்துக் கூறப்படுவதாகவும். சாதிரீதியாகத் தான் இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தன்னை கண்டுபிடிக்கவே முடியாது எனத் தான் சொல்லவில்லை என்றும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றுமே மட்டுமே சொன்னதாகவும் ஆனால் அது திரித்துக் கூறப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

2020லேயே இவர் சொன்ன இதே தகவலை ஒட்டி ஆர்.டி.ஐ. ஒன்று பதிவு செய்யப்பட்டது.அதில், தமிழ் செல்வி என்கிற மீரா மிதுன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக இருந்தாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

முன்னர் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.மீரா மிதுனின் நண்பர் அபிஷேக்குக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர், சர்ச்சையாக பேசி அடிக்கடி வழக்குகளில் சிக்கிக்கொள்வார். முக்கியமாக, கடந்த மாதம் பட்டியலினத்தவர்கள் குறித்து மிகவும் சர்ச்சையாக பேசினார். இதுதொடர்பாக விசிகவின் வன்னியரசு புகார் அளித்த நிலையில், அவர் மீது தடுப்புச் சட்டம் உள்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மீரா மிதுன் போலீசாருக்கு சவால் விட்டார். இதனைத் தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் 14ஆம் தேதி கேரளாவில்  சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரின் நண்பர் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்த போலீசார், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், நட்சத்திர ஹோட்டல் ஊழியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். அப்போது அவர், தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல்துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் புகார் கூறினார். மேலும், தன் மீது வேண்டுமென்றே எந்த காரணமும் இல்லாமல் போலீசார் அடுத்தடுத்து வழக்குகள் போடுவதாகவும், தனக்கு ஜாமீனே கிடைக்கக் கூடாது என்று செயல்படுவதாகவும் கூறினார். உங்கள் மீது காரணத்தோடுதான் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். 

Meera mithun | ‛நான் லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனரா இருந்தப்போ...’ - ‛கம்பிகட்டிய’ மீரா மிதுன்

மேலும், வழக்குகள் குறித்து போலீசார் தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன் சார்பாக வாதா வக்கீல் வரவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக போலீசார், மீராமிதுன் வக்கிலீடம் தகவல் தெரிவித்ததாக கூறினர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.மீரா மிதுன் மீது போடப்பட்ட மொத்த  4 வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களை இழிவாக பேசிய வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே  வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், ‘என்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின மக்களை பற்றி பேசிவிட்டேன். நான் பேசியது தவறுதான். ஆனால், நான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட்டியலின மக்களோடு நான் நட்புடன் இருக்கிறேன். மேலும் பல படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் என்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget